Snapdeal: அம்பானி வீட்டு மாப்பிள்ளை ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு..!

மும்பை: கடந்த 2018-ம் ஆண்டு தட புடலாக நடந்த அம்பானி வீட்டு கல்யாணத்தை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மகளை திருமணம் செய்து கொண்டவர் மற்றொரு பிசினஸ் பரம்பரையின் வாரிசான ஆனந்த் பிரமல்.

பிரமல் குழுமம் ஹெல்த் கேர், லைஃப் சயின்ஸ், மருந்து கண்டுபிடிப்பு, ஹெல்த்கேர் தொடர்பான விவரங்களை நிர்வகிப்பது, பிரத்யேக கண்ணாடி பேக்கிங், நிதி சேவை, ரியல் எஸ்டேட் என பல்வேறு தளங்களில் சாதாரண எளிய மக்களுக்கு புரியாத இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் டாடா, பிர்லா, அம்பானி போல பிரமல் குழுமமும் சிறப்பாக வியாபாரம் செய்து வரும் ஒரு பெரிய நிறுவனம் தான். மேலே சொன்ன இத்தனை வியாபாரங்களையும் ஒரு பக்கம் வைத்து விட்டு அடுத்த நல்ல வாய்ப்புகளை இ காமர்ஸ் தளத்தில் தேடிக் கொண்டிருக்கிறது பிரமல் குழுமம்.

இ காமர்ஸா..?

இ காமர்ஸா..?

பிரமல் குழுமத்தின் செயல்பாட்டு இயக்குநர் ஆனந்த் பிரமல் (இஷா அம்பானியின் கணவர்) தற்போது ஒரு வெளியில் குறிப்பிடாத ஒரு பெரிய தொகையை இந்தியாவின் இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Snapdeal-ல் முதலீடு செய்திருக்கிறாராம். இந்த முதலீடு மூலம் இந்திய இ காமர்ஸ் சூழல் மற்றும் வியாபாரத்தை, பிரமல் நிறுவனம், அளவிடத் தொடங்குவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

டயர் 2 & 3

டயர் 2 & 3

இந்த முதலீட்டை ஏன் செய்தார் என்பதற்கு "Snapdeal இந்தியாவின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் நன்றாக வளர்ந்து வருகிறது. டயர் 2 & 3 நகரங்களில் வளரும் இணைய பயன்பாட்டாளர்களை முழுமையாக பயன்படுத்தி வருகிறது. சிறு குறு தொழில் முனைவோர்களையும், அவர்களின் வியாபாரத்தையும், தன் Snapdeal வலைதள இ காமர்ஸ் சந்தையைப் பயன்படுத்தி வெற்றி அடையச் செய்வதை தன் இலக்காக வைத்திருக்கும் Snapdeal நிறுவனத்தின் பணி பிரமாதமானது" எனப் பாராட்டி இருக்கிறார்.

எதிர்கால வளர்ச்சி

எதிர்கால வளர்ச்சி

அதோடு "கடந்த 2017 முதல் Snapdeal நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது. அதுவும் விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் லாபம் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்தியாவில் கோடிக் கணக்கான இ காமர்ஸ் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் இ காமர்ஸ் ஷாப்பிங் செய்யவில்லை. அந்த இடத்தில் Snapdeal தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நிலை கொண்டு வளர காத்திருக்கிறது" என்கிறார் ஆனந்த் பிரமல்.

நிதி நிலை

நிதி நிலை

இதெல்லாம் போக கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கான முடிவுகளை தில்லாக வெளியிட்டிருக்கிறதது Snapdeal.கடந்த நிதி ஆண்டில் சுமார் 73% தன் வருவாயை பெருக்கி இருக்கிறது. இந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும், Snapdeal வலைதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2.3 மடங்கு அதிகரித்து 7 கோடி என்கிற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. Snapdeal வலைதளத்தில் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் 2018 - 19 நிதி ஆண்டி சுமார் 2.2 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். இதெல்லாம் போக அமேஸான், ஃப்ளிப்கார்ட் என பலரோடு போட்டி போட்டு, தன் இருப்பை மீண்டும் நிலை நிறுத்தி, மீண்டும் லாபம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது Snapdeal. ஆகையால் தான் ஆனந்த் பிரமலும் இதில் ஒரு தொகையை முதலீடு செய்திருக்கிறார் போல. வாழ்த்துக்கள் Snapdeal.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+