டெல்லி : தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் மற்றும் இதர நிபந்தனைகளை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்க வகை செய்கிறது.
இதனால் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் தான் தற்போது மோடி அரசு களம் இறங்கியுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு.
ஆர்.டி.ஐ சட்டத்தை வெற்று சட்டமாக மாற்ற முயற்சி!
ஆக இந்த தகவல அறியும் சட்டத்தை பல் இல்லாத சட்டமாக மாற்றும் முயற்சி என்று எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும் மறுபுறம் தகவல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையையும், தன்னாட்சியையும் நாங்கள் கட்டிக்காப்போம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்ட திருத்த மசோதா?
பல எதிர்கட்சிகளின் பல எதிர்ப்புக்கு மத்தியில், தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்திருத்த மசோதா தகவல ஆணையர்களின் நியமனம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவர்களின் பதவிக்காலம், அவர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு வழி வகுக்கிறது.
ஆர்.டி.ஐ சட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில், பல ஆலோசனைகள் செய்யப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனை பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
பல ஆயிரம் பேர் பயன்
அதோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 60 ஆயிரம் ஆண்களும், பெண்களும் அச்சட்டத்தை பயன்படுத்தி பயன் அடைந்துள்ளனர். இதன்மூலம், அனைத்து மட்டங்களிலும் வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்துக்கு வழிவகுத்துள்ளனர். இதனால், ஜனநாயகத்தின் அடித்தளம் மேலும் வலுபடுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை அழிக்க திட்டம்?
இப்படிப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை தொல்லையாக மத்திய அரசு நினைக்கிறது போலும். இதனால் அந்த சட்டத்தை அழிக்க திட்டமிட்டுள்ளது போலும். தகவல் ஆணையத்தின் தன்னாட்சியையும், அந்தஸ்தையும் இதன் மூலம் மத்திய அரசு அழிக்க விரும்புகிறது. இந்த வகையில் மத்திய அரசால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கிறார்கள்.
குடிமக்களின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந்துவிடும்
இதோடு மத்திய அரசு தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றலாம். ஆனால் இந்த தீவிர முயற்சி, நமது குடிமக்களின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந்துவிடும் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications