இந்தியாவில் எந்த மதம் பெரியது எனக் கேட்டால், கிரிக்கெட் மதத்தை தைரியமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு நாடி நரம்புகளில் எல்லாம் கிரிக்கெட் வெறி பிடித்திருக்கும் நபர்கள் வாழும் ஊர் இது.
அப்படி இந்திய ஜெர்ஸியை அணிந்து களத்தில் இறங்கும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள்.
இப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அணியும் அந்த நீல நிற ஜெர்ஸியை ஸ்பான்சர் செய்ய ஒரு புது நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது.
Byju’s
அந்த நிறுவனத்தின் பெயர்... Byju's. "என்னங்க சொல்றீங்க கம்பெனி ஆரம்பிச்சு 10 வருஷம் கூட ஆகல, இந்த கம்பெனியா டீம் இந்தியாவோட ஜெர்ஸிய ஸ்பான்சர் பண்றாய்ங்க..?" என ஷாக் ஆக வேண்டாம். 2011-ல் Byju ரவீந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டு, இந்தியா முழுமைக்கும், சாரி, உலகம் முழுமைக்கும் கிளைவிட்டு பரவிக் கிடைக்கும் இந்த Byju's தான் இனி இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸியின் ஸ்பான்சர். இவர்களின் ஆண்டு வருவாய் 520 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சரி Byju's ஸ்பான்சர் விஷயத்துகு வருவோம்.
பழைய கதை
பல ஆண்டுகளாக சஹாரா தான் டீம் இந்தியாவின் ஜெர்ஸி ச்பான்சராக இருந்தது. அதைத் தாண்டி ஸ்டார் இந்தியா களம் இறங்கியது. ஸ்டார் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஒப்போ வந்தது. இப்போது ஒப்பாவால் தன் நஷ்டக் கணக்கைத் தாக்கு பிடிக்க முடியாததால் இப்போது தன்னுடைய டீம் இந்தியா ஸ்பான்சர் ஒப்பந்தத்தை Byju's-க்கு தாரை வார்க்கிறது.
பணம்
டீம் இந்தியா அணி ஒரு போட்டியில் விளையாடுகிறது என்றால், பிசிசிஐ அமைப்புக்கு ஒப்போ 4.61 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அதே போல டீம் இந்தியா, ஐசிசி நடத்தும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது என்றால், ஐசிசி அமைப்புக்கு ஒரு போட்டிக்கு ஒப்போ 1.56 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இந்த சுமையை தாங்க முடியாமல் ஒப்போ தன் ஒப்பந்தத்தை Byju's-க்கு கொடுத்திருக்கிறது. இனி Byju's இந்த செலவை ஏற்றுக் கொள்ளும்.
ஒப்பந்த மாற்றம்
அதென்ன ஒப்பந்தத்தை கைமாற்றுவது. மேலே சொன்ன படி டீம் இந்தியா ஒரு சாதாரண போட்டி விளையாடினாலோ அல்லது சர்வதேச போட்டிகளில் விளையாடினாலோ குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். இப்போது ஒப்போவால் கொடுக்க முடியவில்லை. எனவே பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு கொடுக்க வேண்டிய தொகைகளை இனி Byju's கொடுக்கும் என தன் உரிமையை மாற்றம் செய்திருக்கிறது. இதற்கு கைமாறாக இந்திய அணி ஜெர்ஸியில் ஒப்போ என கொட்டை எழுத்தில் இருக்கும் இடத்தில் இனி Byju's என விளம்பர்ம இருக்கும்.
உதவி
Byju's-ம் இந்த முழு தொகையை செலுத்த முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள் போல. எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் ஒப்போ Byju's-க்கு கொடுக்கும். ஆனால் Byju's தான் பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்புக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் கொடுக்க வேண்டும். ஆக இனி டீம் இந்தியாவின் அதிகார பூர்வ ஸ்பான்சராக முடிசூடுகிறது Byju's ஸ்டார்ட் அப். வாழ்த்துக்கள் Byju's.


Click it and Unblock the Notifications