இந்த ஜியோவால் எப்போதும் தொல்லையே.. ஏர்டெல், வோடபோனுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. DCC உறுதி!

டெல்லி : இந்த ஜியோவால் எப்பவும் தொல்லையே. ஆமாங்க ரிலையன்ஸ் ஜியோவுடன் தொடர்பு கொள்ளும் புள்ளிகளை வழங்காதற்காக ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.3,050 அபராதம் விதிகப்பட்டுள்ளதாம்.

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிரச்சனை. ஆமாங்க.. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து சரிவையே கண்டு வந்துள்ள நிலையில் இந்த அபராதம் மேலும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜியோவால் எப்போதும் தொல்லையே.. ஏர்டெல், வோடபோனுக்கு ரூ.3,050 கோடி  அபராதம்.. DCC உறுதி!

ஆமாங்க.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கடந்த 2016ம் ஆண்டில் கோபுரம் அமைக்க இடம் கொடுக்காததால், பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.3,050 கோடி அபாராத தொகை விதித்தது மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய். இந்த நிலையில் தற்போது இந்த அபராதத்தை டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனும் உறுதி செய்துள்ளது.

தொலைத் தொடர்பு துறையில் இறுதி முடிவுகளை எடுக்கும் டி.சி.சி அமைப்பே தற்போது இந்த முடிவுகளை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாங்க.. மத்திய டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கடந்த 2016ல் அக்டோபரில் ஜியோவின் இந்த புகாரை உறுதி செய்தது. இந்த நிலையில் டிராயின் தீர்ப்பின் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் இந்த நிறுவனங்களின் வர்த்தகம் நஷ்டத்தில் இருப்பதாக கூறி வரும் இந்த நிறுவனங்கள் சட்ட பூர்வமாக மீண்டும் எதிர்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிராயின் இந்த பரிந்துரையை டி.சி.சி ஏற்றுக் கொண்டுள்ளதாம். .

இந்த நிலையில் மத்திய டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மதிப்பீட்டின் படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அபராத தொகையாக ரூ.1,050 கோடியும், வோடபோன் நிறுவனத்திற்கு ரூ.1,050 கோடியும், இதுவே ஐ.டியா நிறுவனத்திற்கு ரூ.950 கோடியும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+