பாகுபலி தோனிக்கு பெரும் சிக்கலாக மாறும் அமரபள்ளி... மக்கள் பணம் 6.52 கோடியை வாரி வழங்கியதால்!

டெல்லி : அமரபள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனம் தனக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி வந்த கிரிகெட் வீரர் தோனி, தற்போது அமரப்பள்ளி நிறுவனத்திற்கு 6.52 கோடி ரூபாய் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆமாங்க.. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தோனியின் விளம்பரங்களை நிர்வகித்து வரும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தோனிக்கு கொடுக்கப்பட்ட 6.52 கோடி ரூபாய் பணத்தை திரும்ப கொடுக்க கட்டாயத்தில் உள்ளதாம்.

அதோடு, வீடு வாங்க மக்கள் கொடுத்த பணத்திலிருந்தே, தோனி விளம்பர தூதராக இருந்ததற்கான தொகை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள் ஆடிட்டர்கள்.

தோனி அமரபள்ளி மீது வழக்கு

தோனி அமரபள்ளி மீது வழக்கு

இதற்கு முன்னர், அமரபள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலிருந்து தனக்கு தர வேண்டிய வீட்டையும், தான் விளம்பரத் தூதராக நடித்தமைக்காக தர வேண்டிய ரூ.40 கோடியையும் வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழக்குத் தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தோனியும் ஒரு வாங்கி இருந்தாரா?

தோனியும் ஒரு வாங்கி இருந்தாரா?

ஆமாங்க.. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள அமரப்பள்ளி ரியல் எஸ்டே நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அமரப்பள்ளி சபாரி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் தோனி ஒரு வீடு வாங்கி இருந்ததாகவும், அதோடு அமரப்பள்ளி நிர்வாகம், தன்னை அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் நியமித்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தனக்கான வீட்டையும் ஒதுக்கவில்லை, விளம்பர தூதராக நடித்தமைக்காக பணமும் தர வில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அமரபள்ளிக்காக பல்வேறு விளம்பரங்களில் நடித்தேன்

அமரபள்ளிக்காக பல்வேறு விளம்பரங்களில் நடித்தேன்

இந்த நிலையிலேயே பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்தும் கொடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் இது கடந்த 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்ததாகவும், இதையடுத்து அமரப்பள்ளி நிர்வாகம் நிதிநெருக்கடியில் சிக்கியதை அடுத்து, வீடு முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீட்டை கொடுக்க முடியாத சூழ்நிலையும் நிலவி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

தனிக்கை அறிக்கை என்ன சொல்கிறது?

தனிக்கை அறிக்கை என்ன சொல்கிறது?

இந்திய கிரிகெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உடன் அமரபள்ளி குழுமம் மோசடி ஒப்பந்தங்களை மேற்கோண்டது என்றும், வீடு வாங்குபவர்களின் பணத்தை சட்ட விரோதமாக திருப்பி விட்டுள்ளது என்றும், நீதி மன்றம் நியமித்த தணிக்கையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த தணிக்கையாளர் குழுமம் அளித்த தணிக்கை அறிக்கை உயர் நீதி மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், இதன் படி கடந்த 2009 - 2015ம் ஆண்டில் மொத்த 42.22 கோடி ரூபாயில் 6.52 கோடி ரூபாய் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோனிக்கு எதிராக கிளம்பியுள்ள பிரச்சனை

தோனிக்கு எதிராக கிளம்பியுள்ள பிரச்சனை

இந்த நிலையில், அமரபள்ளி நிறுவனம் மக்கள் வீடு கட்ட கொடுத்த பணத்தில் சுமார் 6.52 கோடி ரூபாயை தோனியின் விளம்பரத் தொகைக்காக கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர்கள் அறிக்கையில் கூறியுள்ளனராம். இதுவரை தோனிக்கு அமரபள்ளி நிறுவனம் பல கோடிகள் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை தோனிக்கு எதிராக திசை திரும்பியுள்ளது.

தோனிக்கு வியாபார தொடர்பும் உண்டு?

தோனிக்கு வியாபார தொடர்பும் உண்டு?

இந்த நிலையில் தோனிக்கு எதிராக பிரச்சனை திசை திரும்பியுள்ள நிலையில், தோனிக்கு, அமரபள்ளி நிறுவனத்தோடு பல வியாபார தொடர்புகளும் இருப்பதாகவும் தணிக்கையாளர்கள் கூறியுள்ளனராம். அதோடு அமரபள்ளி மாஹி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு புராஜக்ட் திட்டம் வகுத்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில், தோனியின் மனைவி சாக்ஷியும் ஒருவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸூம் சம்பந்தமா?

சென்னை சூப்பர் கிங்ஸூம் சம்பந்தமா?

சிஎஸ்கே சர்ச்சை மட்டுமின்றி, தோனியின் மேலாளராக இருக்கும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் அமரபள்ளி போட்டுக் கொண்ட விளம்பர ஒப்பந்தத்தில் 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்வதாக கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் பத்திரத்தில் அப்படி ஏதும் எழுதப்படவில்லை என்பதோடு, சிஎஸ்கே அணியில் இருந்து யாரும் இந்த ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் மேலாளர் அருன் பாண்டேவுக்கு ஆதரவாக எந்த தீர்மானமும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

ரிதி ஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த நிறுவனம்?

ரிதி ஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த நிறுவனம்?

ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த திறமைக்கான ஒப்புதல் நிறுவனமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 2009ம் ஆண்டில் அதன் நியாமான, வெளிப்படையான வணிக பரிவர்த்தனையின் காரணமாக அம்ரபள்ளி நிறுவனத்தால் தக்க வைத்துக் கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின் படி அனைத்து தொழில் முறை சேவைகளையும் வழங்கியதால் நிதிகள் பற்றிய கேள்விகள் எழவில்லை. அதோடு அமரபள்ளியிடமிருந்து நிதி பெறப்படும் முன்பே, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்புதல் கட்டணம் ஊழியர்கள் மற்றும் பிரபலங்களுக்கு செலுதப்பட்டது என்றும் ரிதி ஸ்போர்ட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தோனி ஒரு மாதத்திற்குள் ரூ.6.52 கோடி தர வேண்டும்?

தோனி ஒரு மாதத்திற்குள் ரூ.6.52 கோடி தர வேண்டும்?

இதை விட கொடுமை என்னவெனில் அந்த நிறுவனத்திற்கான ஷேர் கேபிடல் தொகை முழுவதும் ரொக்கப் பணமாக பெறப்பட்டுள்ளதாம். ஆமாங்க.. எந்த பணமும் வங்கி மூலமாக வரவில்லையாம். அதே போல, செலவுக் கணக்குகளும் முழுவதும் ரொக்கப் பணமாகவே செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை உருவாக்குகிறது. இதானால் இந்த தணிக்கை அறிக்கையை திரும்ப கொடுக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்குள் தோனியின் விளம்பரத்திற்காக வழங்கப்பட்ட 6.52 கோடி ரூபாய் பணம், வீடு வாங்க மக்கள் கொடுத்த பணம் என்பதால், அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மக்களிம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்?

மக்களிம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்?

எனினும் அமரபள்ளி தோனிக்கு கொடுக்க வேண்டிய மொத்த பணம் மற்றும் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு 115 கோடி ரூபாய் அளவுக்கு அமரபள்ளி நிறுவனத்திடம் பாக்கி உள்ளது எனவும் கூறியுள்ளது. தனது பணம் பல கோடிகள் அந்த நிறுவனத்திடம் இருந்தாலும், அதை விடுத்து மக்களின் பணமான 6.52 கோடி ரூபாயை தோனி திரும்ப கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+