வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்வதை சிலர் அதை பொழுதுபோக்காக நினைத்துக்கொண்டுள்ளனர். அப்படி நினைப்பவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு கருணையே காட்ட முடியாது என்றும் சட்டத்தின் பிடி
டெல்லி: வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்வதை சிலர் அதை பொழுதுபோக்காக நினைத்துக்கொண்டுள்ளனர். அப்படி நினைப்பவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு கருணையே காட்ட முடியாது என்றும் சட்டத்தின் பிடியில் இருந்து நிச்சயமாக தப்பிக்கவே முடியாது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வார்த்தைகளுக்கு எப்படி உயிர் எழுத்துக்கள் (a, e, I, o, u) முக்கியமோ அதேபோல் தான் மத்திய அரசுக்கு வரி வருவாயும் முக்கியம். வரி ஏய்ப்பு (Avoidance) வரி மோசடி (Evasion), இரண்டையும் தவிர்த்து, வரி செலுத்துவோர் (You) வரியை முறையாக எங்களுக்கு(I) செலுத்துவது கடமை (Owe) என்று நினைக்கவேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன்.

வரி செலுத்துவோர் அதை மாபெரும் தண்டனையாகக் கருதாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பாகவே அதை நினைக்கவேண்டும் என்றும் கூறிய நிர்மலா சீதாராமன் வரி ஏய்ப்பை தடுக்க வருவாய் துறையினர் தங்கள் மேற்கொள்ளும் விசாரண பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு விசாரணை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு என்னதான் வரி விதிப்பு முறைகளை கடுமையானதாக ஆக்கினாலும், சில புல்லுறுவிகள், அதிலிருந்து தப்பித்த வண்ணம் உள்ளனர். வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதற்கு முன்பே அதை ஏமாற்றி அதிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது என்பதைப் பற்றி நன்கு ஆராய்ந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்துகின்றனர்.
கூடவே, வரி வசூல் செய்துவிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு முறையாக செலுத்தாமல், வசூலித்த வரியை எப்படி தங்கள் வாயில் போட்டுக்கொள்வது என்பது பற்றியே தீவிரமாக ஆராய்ச்சி செய்கின்றனர். அவர்கள் இதை ஒரு பொழுதுபோக்காகவே நினைத்துக்கொண்டுள்ளனர்.
இதனை நன்கு உணர்ந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று அவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருமான வரி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் விருப்பப் படி வரி வருவாயை தற்போதுள்ள இலக்கிலிருந்து அதிகரிக்க திட்டமிட வேண்டியது அவசியமாகும். வரித்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் வரி வருவாயை எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக்கியுள்ளது.
நடப்பு 2019-20ஆம் ஆண்டில் வரி வசூல் சுமார் ரூ.13.35 லட்சம் கோடி என பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள நிலவரப்படி வரி வசூல் இலக்கு நிச்சயமாக எதிர்பார்த்த இலக்கை எட்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்பவர்கள் அதை பொழுதுபோக்கு விளையாட்டாக நினைக்கின்றனர். மேலும் அந்த வரி மோசடி விளையாட்டை வரித்துறையினருக்கு தெரியாமல் விளையாடுவதாக அவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். மோசடி நபர்களின் விளையாட்டை நீங்கள் (வரித்துறை) தீவிரமாக கண்காணித்து வருவதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
வரி மோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. அவர்களுக்கு கருணையே காட்ட முடியாது என்றும் காட்டமாக கூறினார். மேலும் வருவாய்த்துறையின் புலனாய்வுப் பிரிவினர் தங்களின் விசாரணை விபரங்களை வரித்துறையின் மற்ற அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வரி செலுத்துவதை மாபெரும் தண்டனையாக கருதாமல் நாட்டின் வளர்ச்சிக்க தங்களின் பங்களிப்பாக கருதினால் மட்டுமே மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வார்த்தைகளுக்கு எப்படி உயிர் எழுத்துக்கள் (a, e, I, o, u) முக்கியமோ அதேபோல் தான் மத்திய அரசுக்கு வரி வருவாயும் முக்கியம். வரி ஏய்ப்பு (Avoidance) வரி மோசடி (Evasion), இரண்டையும் தவிர்த்து, வரி செலுத்துவோர் (You) வரியை முறையாக எங்களுக்கு(I) செலுத்துவது கடமை (Owe) என்று நினைக்கவேண்டும் என்று முத்தாய்ப்பாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications