ஜெய்பூர், ராஜஸ்தான்: ஜெய்பூர் நகரவாசிகளுக்காக ராம் நிவாஸ் பாக் மற்றும் ராம்பாக் சர்கில் பகுதிகளில் ஸ்மார்ட் கழிவறைகளைக் கட்டத் தொடங்கி இருக்கிறது ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம். இந்த ஸ்மார்ட் கழிவறை ஜெய்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
அப்படி என்ன ஸ்மார்ட் கழிவறையில் இருக்கிறது..? எனக் கேட்டால்,

1. பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு தனி இடம் இருக்குமாம்.
2. பெண்களுக்கான கழிவறைகளில் நாப்கின்களை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு இருக்குமாம்.
3. அதோடு பயன்படுத்திய நாப்கின்களைச் சேகரிக்க incinerator-களையும் வைக்கப் போகிறார்களாம்.
4. மிக முக்கியமாக கைக் குழந்தையை வைத்திருக்கும் தாய் மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட தனி அறையை ஒதுக்க இருக்கிறார்களாம்.
அதோடு இந்த ஸ்மார்ட் கழிவறைக்கு அருகிலேயே
1. குளிர்ந்த நீரைக் கொடுக்கும் இயந்திரம்,
2. வங்கிகளில் இருந்து பணம் எடுக்க உதவும் ஏடிஎம் இயந்திரம்
3. Wifi போன்ற வசதிகளையும் கொடுக்க இருக்கிறார்களாம்.
இந்த ஸ்மார்ட் கழிவறைகளை கிட்ட தட்ட கட்டி முடித்துவிட்டார்களாம். இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப் போகிறார்களாம்.
இந்த ஸ்மார்ட் கழிவறை மக்களுக்கு கூடுமான வரை அனைத்து வசதிகளையும் பொது இடத்தில் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய இயக்குநர் வி எஸ் சுனந்தா.
மேலே சொன்னது போல, பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு என்று தனி காத்திருப்பு அறை வசதிகள் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள். இதெல்லாம் போக கட்டி முடிக்கப்படும் இந்த ஸ்மார்ட் கழிவறையை யார் நடத்துவது என இன்னும் தீர்மானிக்கவில்லையாம்.
பெரும்பாலும் ஜெய்பூர் நகராட்சி தான் ஏற்று நடத்த வேண்டி இருக்கும். யார் ஏற்று நடத்துவார்கள் என்கிற விவரத்தை கூடிய விரைவில் தெரிவிக்கிறோம் எனச் சொல்கிறார்கள் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள். இப்படி ஒரு கழிவறையைக் கட்ட சுமார் 60 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இப்படி ஜெய்பூர் நகரத்தின் முக்கியமான பகுதிகளில் ஐந்து கழிவறைகளைக் கட்ட அரசிடம் கேட்டார்களாம்.
ஆனால் போதுமான பட்ஜெட் இல்லாததால், இரண்டு ஸ்மார்ட் கழிவறைகளை மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். மேலே சொன்ன எல்லா வசதிகளும் ஓகே. ஆனால் கழிவறையில் Wifi வசதி எதற்கு என்று தான் தெரியவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications