முகேஷ் அம்பானி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனில் அம்பானி சரிவை சந்தித்து வருகிறது.
அனில் அம்பானிக்கு ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் திவால் ஆக உள்ளது.

அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இக்கடனுக்கான வட்டியும், அசலும் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் எடுக்கப்பட்ட அதே நடவடிக்கையை இந்த நிறுவனத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களையும் இணைந்து ஒரு குழு அமைத்து IDBI வங்கி தலைமையில் இயங்கி வருகிறது.
கடனுக்கான வட்டியும், அசலும் செலுத்தப்படாத நிலையில் இந்நிறுவனத்தின் கடனை தீர்க்கும் பொருட்டு IDBI வங்கி தலைமையிலான குழு இந்நிறுவனத்தின் மீது திவாலாக அறிவிக்கும் வேலைகளைத் துவங்கியுள்ளது.
கடனை தீர்க்க முறையான திட்ட வடிவம் எதுவும் கொடுக்க முடியாத நிலையில் அனில் அம்பானியும், ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிர்வாகமும் இருக்கும் காரணத்தால் IDBI வங்கி குழு இந்த முடிவிற்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி இந்நிறுவன கடனுக்கான தீர்வு அளிக்கும் காலம் ஜூலை துவக்கத்திலேயே முடிந்த நிலையில் ரிலையன்ஸ்் நிர்வாகக் கொடுத்த தீர்வு திட்டத்தை வங்கி நிர்வாகம் மறுத்தது.
இந்நிலையில் வங்கி நிர்வாகம் தற்போது வங்கி நிர்வாகக் கடனுக்கான தொகையைப் பங்குகளாக மாற்றி கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications