டெல்லி : இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான விதிமுறைகளை தளர்த்தினால், இந்தியாவின் வருமானம் 14 மடங்கு அதிகரிக்கும் என்கிறது அல்மா பவுண்டேஷன்.
ஆமாங்க.. இந்த அல்மா பவுண்டேஷன் மற்றும் ஹின்ரிச் பவுண்டேஷன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலாபம் 14 மடங்கு அதிகரித்து, 35 பில்லியன் டாலரிலிருந்து 512 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் வர்த்தக அறிக்கையின் படி, ஏற்றுமதி மதிப்பு, virtual goods and services ஏற்றுமதி அடுத்த 2030 ஆண்டுக்குள் 3 மடங்காக அதிகரிக்க கூடுமாம். ஆமாங்க.. 58 பில்லியன் டாலரிலிருந்து 197 பில்லியன் டாலராக அதிகரிக்குமாம்.
இந்த விதித் தளர்வு வலுவான செயல்திறனை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும், ஏற்றுமதி சந்தையினை மேம்படுத்தவும், இந்தியாவின் எல்லை தாண்டிய பரிமாற்றங்கள், செயலாக்கம் ஆகியவற்றை ஆதரிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய தரவுகளுக்கான, உள்நாட்டு ஒழுங்குமுறையை, அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தரவு பாதுகாப்பு சட்டம் என்பது தனியாக இல்லை, ஆனால் பல துறைகளில் பல சட்டங்கள் உள்ளன. எனினும் தற்போதுள்ள இந்த விதிகள் உணர்திறன் எனக் கருதப்படும் தனிப்பட்ட தரவை, வெளிநாடுகளுக்கு மாற்றுவதை கட்டுப்படுத்துகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த, தரவு பாதுகாப்பு குறித்த சட்டத்தை இந்தியா தற்போது பரிசீலித்து வருகிறது. அதிலும் முன்னாள் நீதிபதி பி.என் கிருஷ்ணா தலைமையில் 10பேர் கொண்ட நிபிணர் குழு, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா 2018 என்ற வரைவை, கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணா மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைக்கு சமர்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரைவில் தரவு பாதுகாப்பு அதிகாரத்தை அமைப்பதற்கும், எல்லை தாண்டிய தரவுகளுக்கு கட்டுப்பாடுகளை வைப்பதற்கும் இந்த குழு பரிந்துறை செய்துள்ளதாம்.
இந்தியா தனது பல்வேறு இரு தரப்பு மற்றும் பல தரப்பு வர்த்தக பேச்சு வார்த்தைகளில் வசதியான வர்த்தக விதிகளை முன்வைப்பதில் உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் இந்தியாவின் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications