இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ், தனது ஊழியர்கள் அதிகளவில் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நாளாகப் போராடி வருகிறது.
இதனை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள இன்போசிஸ், இந்த முக்கியமான வேலையை நேரடியாக நிர்வாக உறுப்பினர்கள் அதாவது போர்ட் ஆப் டைரக்டர்ஸ்-ஏ கையில் எடுத்துள்ளனர்.

பொதுவாக ஐடி நிறுவனங்களில் attrition rate எனப்படும் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளிலும் முக்கிய விவாத பொருளாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு இது பெரிய தலை வலியாக மாறியுள்ளது.
எப்போது 13 முதல் 15 சதவீதம் மட்டுமே இருக்கும் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த 3 ஆண்டுகளாக 20 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. அதிலும் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் இதன் அளவு உச்சக்கட்டமாக 23.4 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது.
இது ஒவ்வொரு நிர்வாகக் குழு கூட்டத்திலும் பெரும் பிரச்சனையாக இருப்பதால் ஊழியர் வெளியேற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு நேரடியாக நிர்வாக உறுப்பினர்களே களத்தில் இறங்கியுள்ளனர்.
ஊழியர்கள் வெளியில் போனால் என்ன..? என நீங்கள் கேட்பது புரிகிறது.
உற்பத்தி நிறுவனங்களைப் போல் அல்லாமல் மனிதர்களையும், மனித மூளையை நம்பி இயங்குபவை இந்த ஐடி நிறுவனங்கள். இப்படியிருக்கும் போது அதிகமான ஊழியர்கள் வெளியேறினால் நிறுவனத்தின் சேவை திறன் குறையும். இதனால் புதிய வர்த்தகம் மட்டும் அல்லாமல் இருக்கும் வர்த்தகம் கூடப் பாதிக்கும்.
ஆனால், இன்போசிஸ் என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை, வெளியேற்றும் ஊழியர்களில் 80 சதவீதம் பேர் 5 வருட அனுபவம் உள்ள முதல் அடுக்கு ஊழியர்கள் தான். இதுவே உயர் மட்ட ஊழியர்களாக இருந்தால் இன்போசிஸ் வர்த்தகம் வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த காசு மாதிரிதான் ஊ.. ஊ...


Click it and Unblock the Notifications