மதுரை : மதுரை மாநகரில் பல தரப்பட்ட உணவகங்கள் உணவுகள் இருந்தாலும் இங்கு ரொம்ப பிரபலம் மதுரை பன் பரோட்டாவும் இதற்கு காம்பினேஷனாக கொடுக்கும் நாட்டுக் கோழி கிரேவியும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் மதுரை மக்கள்.
ஆமாங்க.. இதை பார்த்த உடனே நா ஊறுகிறதல்லவா? இது தான் இந்த தொழிலின் வெற்றியே என்கிறார், மதுரை பன் பரோட்டா உரிமையாளர் அண்ணாச்சி கருப்பணன்.
நிஜமாதாங்க.. கடந்த 28 வருடங்களாக வெற்றிகராக நடத்திக் கொண்டிருப்பதற்கும் இந்த அபாராமான ருசியே காரணம் என்கிறார்.
அபாரான சுவை?
எல்லா ஊர்களிலும் பரோட்டா கிடைக்கும். ஆனால் இந்த அளவுக்கு ருசி இருக்குமா என்றால் இருக்காது. அதை நீங்கள் வந்து சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்கிறார் அண்ணாச்சி. இதற்கு காரணம் மாவு பிசையும் விதமும் அதை செயல்படுத்தும் விதமுமே காரணம் என்கிறார்.
இங்கு என்ன பிரபலம்?
மதுரையை பொறுத்த வரை வித விதமான ருசி ருசியான கடைகள் பல இருந்தாலும், பல கடைகளின் பரோட்டா கிடைத்தாலும், இங்கு கிடைப்பது போல் எங்கும் கிடைக்காது என்கிறார்கள். இந்த புரோட்டா பன் போல நல்ல உப்பலாக மிருதுவாக, மேல்புறம் கிரிஸ்பியாக இருக்கும் இந்த பரோட்டாவை ஒரு முறை உண்டால், மீண்டும் தானாக தேடி வருவீர்கள் என்றும் சொல்கிறார் இந்த அண்ணாச்சி.
இவ்வளவு ருசியான பரோட்டா எப்படி?
இங்கு செய்யப்படும் இந்த பன் பரோட்டாவிற்கு 3 - 4 மணி நேரத்திற்கு முன்பே மாவு பிசைய ஆரம்பித்துவிடுவார்களாம். ஆமாங்க.. பால், முட்டை, கொஞ்சம் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து பிசைந்து 4 மணி நேரம் நன்கு பிசைந்து ஊற வைக்க வேண்டுமாம். இப்படி ஊற வைத்து, பிசைந்து, மாஸ்டரின் கைப்பக்குவத்தால் வருவதே இந்த பன் பரோட்டா என்றும் பெருமையாக கூறுகிறார் அண்ணாச்சி.
பன் பரோட்டாவின் விலை எப்படி?
இந்த பன் பரோட்டாவின் விலை ஒன்றுக்கு 15 ரூபாயாம். இதற்காக நமக்கு எந்த வகையான குருமா வேண்டுமானலும் வாங்கிக் கொள்ளலாமாம். அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் கிரேவி என மூன்று வகையாக அசத்துகிறார்களாம். அதிலும் இவர்களின் நாட்டுக் கோழி கிரேவியை அடித்துக் கொள்ள வேறு ஆளோ இல்லை என்கிறார்கள் இங்கு வரும் ரெகுலார் வாடிக்கையாளர்கள்.
வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
இங்கு வரும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் தான் இந்த பன் பரோட்டாவிற்கு அடிமை எனில், வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இதற்கு அடிமையாம். ஆமாங்க.. அதிலும் பன் பரோட்டாவும் நாட்டுக் கோழி கிரேவியும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்களாம். இந்த ஊர் ஆட்டோகாரர்களும் டூரிஸ்டுகளும் கூட்டிக் கொண்டு வரம் கடை நம்ம அண்ணாச்சி கடைதானாம்.
எவ்வளவு விற்பனை?
இது வியாபார ரகசியம் என்று சிரித்துக் கொண்டே சொல்லும் அண்ணாச்சி தற்போது மற்றொரு கடையை ஆரம்பித்துள்ளாராம். ஆமாங்க.. ஒன்றும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆவின் பால் அருகில் உள்ளதாம், இது தான் அண்ணாச்சியின் 28 வருட பாரம்பரிய கடையாம். இதுவே மதுரை அண்ணா நகரில் தற்போது தான் ஆரம்பித்து இருக்கிறராம். ஒரு நாளைக்கு அண்ணா நகரில் 30 கிலோ மாவு பிசைவார்களாம். இதுவே கே.கே நகர் கடையில் சாதரணமான நாட்களில் 100 கிலோ மாவும், விடுமுறை நாட்களில் 120 கிலோ மாவும் பிசைவார்களாம்.
எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?
கே.கே நகரில் உள்ள கடையில் தற்போதைக்கு 15 பேரும், இதே அண்ணா நகரில் உள்ள கடையில் 10 பேரும் வேலை செய்கிறார்களாம். இதன் மூலம் 25 குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிகிறது என்று கூறுகிறார் அண்ணாச்சி. ஆமாங்க, இவரின் கடையில் வேலை செய்பவர்கள் அனைவருமே வருடக் கணக்கில் வேலை செய்பவர்கள் தானாம்.
சரி வருமானம் எப்படி?
கே. கே நகரில் உள்ள் கடை சொந்தக் கடையாக இருந்தாலும், அண்ணா நகரில் உள்ள கடை வாடகை கடை என்றும் கூறுகிறார். அதிலும், தற்போது ஆள் சம்பளம், பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி சம்பளம், மளிகை பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று ஏறிக் கிடக்கிறது என்கிறார். 1000 கிடைக்கிறது எனில் தற்போது 700 - 800 ரூபாய் மற்ற செலவினங்களுகே செலவாகி விடுகிறது. இதனால் வருமானம் குறைவு தான். இருப்பினும் நிம்மதியான வருமானம் என்றும் கூறுகிறார்.
வேறு என்ன ஸ்பெஷல்?
இங்கு பரோட்டா மட்டும் அல்ல மதுரையின் மிகப்பிரபலமான உணவான, கறிதோசையும் மிகப்பிரபலம் என்று கூறுகிறார். ஆமாங்க.. இது மட்டும் அல்லாது சிலோன் முட்டை பரோட்டா, முட்டை பரோட்டா, என்றும் இதற்கு சைடு டிஸ்ஸாக சிக்கன் கிரேவி, காடை கிரேவி, ஆட்டு ஈரல் கிரேவி, மட்டன் கிரேவி என அசத்துகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் விரும்பி உண்ணும் அளவுக்கு தான் காரம் என்பது மீடியாமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
எப்ப சார் கடையை திறப்பீங்க?
இந்த பன் பரோட்டா கடை கே.கே நகரில் மாலை 6 மணி முதல் இறவு 11 மணி வரை கூட இருக்கும். இதுவே அண்ணா நகரில் உள்ள கடையில் மாலை 3 மணிக்கெல்லாம் களை கட்டிவிடுமாம். இரவு 11மணி வரை இருக்குமாம். வாங்களேன் நாமும் ஒரு முறை அண்ணாச்சி கடைக்கு சென்று பார்த்து தான் வருவோம், அண்ணாச்சியின் வியாபார ரகசியம் என்னவென்று பார்த்து வருவோம்... !
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications