இப்படியும் கூட சம்பாதிக்க முடியுமா..இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ரூ.1.35கோடி சம்பாதிக்கும் வீராட் கோலி!

மும்பை : நாளுக்கு நாள் இந்தியாவில் சமூக வலைதளங்களின் மோகம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர்களின் பதிவுகளை பிரபலங்கள், தங்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட தொகை வசூலிக்கப்பது வழக்கம்.

அந்த வகையில் சர்வதேச எந்த வீரர் செலிப்பிரிட்டு அதிகளவு இதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள, இந்தியர்கள் இருவர் தானாம். ஆமாங்க ஒன்று பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்தியர், கிரிக்கெட் வீரர் வீராட் கோலியாம்.

இப்படியும் கூட சம்பாதிக்க முடியுமா..இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ரூ.1.35கோடி சம்பாதிக்கும் வீராட் கோலி!

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் கிரிகெட் வீரர்களில் ஒருவர் தான் இந்த இடத்தை பிடித்துள்ளராம். அந்த வகையில் வீராட் கோலி தான் இந்த இடத்தை பிடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் மிகப் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

ஆமாங்க.. சமூக வலைத்தளங்களில் இன்று புகைப்படங்கள் மற்றும் பல விதமான விஷயங்களை ஷேர் செய்யும் ஆப்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவில் வியாபார நோக்கில் சம்பாதிப்பதும் இவர்கள் இருவர் தானாம்.

இன்றைய நாளில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லாமல் இல்லை. அப்படி இருக்கையில் இது போன்ற சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலாமாக்கப்பட்டு வருவது பெரிய விஷயம் இல்லை என்றாலும் ,இதை வைத்தும் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுகிறது.

குறிப்பாக திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் தங்கள் சுவாரஸ்யமான புகைப்படங்களை பகிர்கின்றனர். இந்த மாதிரியான ஸ்பான்சர்களின் பதிவுகளை பிரபலங்கள், தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட, குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

இந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் பணக்காரர் யார்? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், விளையாட்டு வீரர்களில் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலக அளவில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தானாம். அதுவும் அவர் 9வது இடத்தில் இருக்கிறாராம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 38 கோடி பேர் பின்தொடர்கின்றனராம்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் பதிவு ஒன்றுக்கு 1,96,000 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1.35 கோடி பெறுகிறார். இந்த பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9,75,000 டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து நெய்மர், மெர்சியும் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவே திரை பிரபலங்கள் மத்தியில் பிரியங்கா சோப்ரா 1.86 கோடி ரூபாய் பெறுகிறாராம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+