டீசல் விலை அதிகரித்தால் என்ன.. ரயில் கட்டணம் உயராது.. பியூஷ் கோயல் அதிரடி!

டெல்லி : மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது வரியை அதிகரித்தது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும், தொடர்ந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் டீசல் கட்டணம் உயர்ந்தாலும், ரயில்வே கட்டணத்தில் எந்தவித உயர்வும் இல்லை என்று கூறியுள்ளார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

ரயில்வே கட்டணத்தில் மாற்றம் இல்லை

ரயில்வே கட்டணத்தில் மாற்றம் இல்லை

ஆமாங்க.. கலால் வரி மற்றும் செஸ் வரி அதிகரிப்பால் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டீசல் விலை உயர்வின் காரணமாக, ரயில்வே கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பியூஷ் கோயல் மக்களவையில் இன்று கூறியுள்ளார்.

ரயில்வேயை மின்சார மயமாக்கம்

ரயில்வேயை மின்சார மயமாக்கம்

இதுமட்டுமல்ல ரயில்வேயை மின்சார மயாமாக்கும் திட்டம் படிபடியாக உயர்த்திக் கொண்டே வருவதால், அடுத்த 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களும் மின்சார ரயில்களாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும், இதனால் 2022க்குள் அனைத்து ரயில்களும் 100 சதவிகிதம் மின்சார ரயில்களாக மாற்றப்படும் என்றும் கோயல் கூறியுள்ளார்.

பயணிகள் கட்டணத்தில் தாக்கம் இருக்குமா?

பயணிகள் கட்டணத்தில் தாக்கம் இருக்குமா?

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரி பிரசாத், பெட்ரோலிய பொருட்களின் ஏற்ற இறக்கமானது பயணிகள் கட்டணத்திலும், சரக்கு போக்குவரத்திலும், அதன் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் ஏற்படுத்துமா? கடந்த மாத தொடக்கத்தில், மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசலுக்கான வரியை நிதியமைச்சர் சீதாராமன் அதிகப்படுத்தியதில் இருந்து, பெட்ரோல் டீசல் விலை, அதன் அடிப்படை விலையிலிருந்து 1 ரூபாய் அதிகரித்துள்ளது.

நாட்டில், டீசல் நுகர்வோரில் மூன்றாவது ரயில்வே

நாட்டில், டீசல் நுகர்வோரில் மூன்றாவது ரயில்வே

இதனால் ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது டீசல் நுகர்வோராகும். இதனால் டீசல் பயன்பாட்டினை இங்கு குறைக்கும் போது, கார்பனை குறைப்பதற்கு இது ஒரு முக்கிய வழியாக இருக்கும். இதன் மூலம் பசுமை ஆற்றலுக்கு எளிதில் நகர்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

3.1 பில்லியன் லிட்டர் டீசல் உபயோகம்

3.1 பில்லியன் லிட்டர் டீசல் உபயோகம்

இந்த நிலையில் நாட்டின் மொத்த நுகர்வுகளில் சுமார் 1.27 சதவிகிதம், அதன் எரிசக்தி தேவைகளுக்காக மூன்ற சதவிகித டீசலையும், பொதுப் போக்குவரத்து துறையான ரயில்வே துறை பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மொத்தம் 20.44 பில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 3.1 பில்லியன் லிட்டர் டீசலையும் பயன்படுத்தியுள்ளது என்றும் கோயல் கூறியுள்ளார்.

பயோ டீசலுக்கும் மாறி வரும் ரயில்வே

பயோ டீசலுக்கும் மாறி வரும் ரயில்வே

மேலும் ரயில்வே மின்மயமாக்கலுடன், புதை வடிவ எரிபொருளைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க ரயில்வே பயோ டீசலைப் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+