டெல்லி : நாளுக்கு நாள் தொழில் நுட்பம் வளர வளர புது புது டெக்னாலஜிகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில், தற்போது சோனி நிறுவனம் ஒரு புதிய வகை ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆமாங்க.. போர்டபில் ஏசியான இது, Reon Pocket ஏசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறைய ரக ஏசியை நாம் நமது ஆடைக்குள் வைத்துக் கொள்ளலாமாம்.
இப்படி ஒரு ஏசியா?
ஆமாங்க.. ஸ்மார்ட்போனை விட சிறிய ரகமான இந்த ஏசி, ஸ்மார்ட்போனை விட எடையும் குறைவு தானாம். இந்த ஏசியை ஆண்களுக்காக என்று பிரத்யோகமாக தயாரிக்கப்ப்ட்டுள்ளதாம். ஆமாங்க இந்த ஏசியை ஆண்கள் தங்களது சட்டை காலருக்கு கீழ் வைத்துக் கொள்ளலாமாம். இது மொபைல் போனை போல சார்ஜ் போட்டுக் கொண்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாமாம்.
எப்படி ஆப்ரேட் செய்வது?
இந்த ஏசியை நமது ஸ்மார்போனிலிருந்து வெப்பத்தை புளூடூத் மூலமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதோடு இந்த ஏசியை 2 மணி நேரம் சார்ஜ் செய்து கொண்டால் 90 நிமிடங்கள் வரை உபயோகித்து கொள்ள முடியுமாம். எப்படி இனி எங்க போனாலும் நாங்க ஏசியோடதான் போவோம் என்று கூறுகிறீர்களா? ஆமாங்க.. இந்த ரீசார்ஜ் யூஸபில் பேட்டரி உங்களுக்கு மிக உபயோகாக இருக்கும் என்கிறது இந்த நிறுவனம்.
டோக்கியோவைத் தளமாக கொண்ட நிறுவனம்?
டோக்கியோவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஏசிக்கு பெல்டுடன் இருக்குமாம், இது சாதாரணமாக கார் மற்றும் ஒயின் குளிரூட்டிகளில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறதாம். சோனியின் ரியான் பாக்கெட் திட்டம் ஒரு கூட்ட நெரிசலான திட்டம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்திற்கு 28,236,670 யென் கிடைத்துள்ளதாம். எனினும் இதன் இலக்கு 66,000,000 யென் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரேயான் ஏசியின் விலை எப்படி?
இந்த பாக்கெட் ஏசியின் விலை 14,080 யென்களாம், ஆமாங்க.. இந்திய ரூபாயில் 8,992 ரூபாயாம். இது தற்போது S, M மற்றும் L சைஸ்களில் கிடைக்குமாம். இது ஆண்களுக்காக மட்டும் மட்டும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இதை ஆண்கள் தங்களது சட்டை காலரின் கீழ் பொருத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
மெல்லிய துணியால் துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம்?
இந்த ஏசிகளில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்குமாம். அதோடு இந்த பாக்கெட் ஏசிகளை Bluetooth 5.0 LE மூலம் மொபைல் போன்களில் செயல்படுத்த முடியுமாம். இந்த ஏசிக்கு வாட்டர் புரூப் வசதி இல்லையாம். எனினும் அழுக்கு மற்றும் வியர்வை நீர் துளிகளையும், மென்மையான துணியால் துடைக்க முடியுமாம். எப்படி சூப்பர்லா!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications