இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் முன்னோடி என்றால் பேடிஎம் தான்.
வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த பணப் பரிமாற்றம் வேலெட் சேவை மூலம் பேடிஎம் வெற்றிக் கண்டது, இந்த வெற்றிக்கு மோடி அரசின் பணமதிப்பிழப்பு முக்கிய பங்காற்றியது.

இப்படி இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் கொடிகட்டிப் பறந்த பேடிஎம், கூகிள் நிறுவனத்தின் tez அறிமுகம் செய்யப்பட்ட போது ஒரு சரிவைக் கண்டது, அதன் பின் கூகிள் இந்தச் செயலியை ரீபிராண்டிங் செய்து கூகிள் பே என்ற பெயரில் அறிமுகம் செய்து பேடிஎம் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டியாக விளங்கியது.
எரியும் எண்ணெய் ஊற்றுவது போல், இத்துறையில் போட்டியை அதிகரிக்கப் பேஸ்புக் களமிறங்கியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப், ஏற்கனவே பல நாடுகளில் தனது பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்து வெற்றி கண்ட நிலையில், தற்போது இந்தியா வர உள்ளது.
இந்தியாவில் சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது. தற்போது வெறும் சோதனை தளத்தில் மட்டுமே இருக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை இனி எல்லோருக்கும் கிடைக்கும்.
வாட்ஸ்அப்-இன் இந்த முடிவு பேடிஎம்-க்கும், கூகிள் நிறுவனத்திற்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.
இதனால் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் மாபெரும் போட்டி உருவாகும் எனத் தெரிகிறது. இதனால் மக்களுக்குத் தான் அதிகப்படியான லாபம். இனி கூகிள் பே-வில் Better Luck Next Time வராமல் பணம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications