நம்ம சினிமா நடிகை.. "சொப்பன சுந்தரி" எலிசபெத் டெய்லரோட ரோல்ஸ் ராய்ஸ் ஏலத்துக்கு வருதுப்பா!

பச்சை தேவதை என்றழைக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார் எலிசபெத் டெய்லர் கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தபோது வாங்கி பயன்படுத்தியது. ஆகஸ்டு 6ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் உள்ள நட்சத்

நியூயார்க்: ஹாலிவுட்டின் கனவுக்கன்னியான பழம்பெரும் நடிகை எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்பட உள்ளது. கடந்த 1950ஆம் ஆண்டு மாடல் தயாரிப்பான இந்த கார் சுமார் 24 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பச்சை தேவதை என்றழைக்கப்படும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் எலிசபெத் டெய்லர் கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தபோது வாங்கி பயன்படுத்தியது. வரும் ஆகஸ்டு 6ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏலம் விடப்படுகிறது.

கிளியோபாட்ரா என்றும் காந்தக் கண்ணழகி என்று செல்லமாக அழைக்கப்பட்ட முன்னாள் ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் 1932ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்தார். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அப்போது முதல் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஹலிவுட் கனவுக்கன்னி

ஹலிவுட் கனவுக்கன்னி

தொடக்க காலத்தில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றத் தந்தது. அதேபோல், அவர் நடித்த கிளியோபாட்ரா என்ற படம் ஹாலிவுட் திரையுலகின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதோடு கனவுக்கன்னி என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது. இன்றைக்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற 7 பெண்மணிகளில் எலிசபெத் டெய்லருக்கு தனி இடம் உண்டு.

கவர்ச்சிக்கன்னி

கவர்ச்சிக்கன்னி

எலிசபெத் டெய்லர் நடிப்பிற்காக இரண்டு முறை ஆஸ்கார் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பு எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அதேபோல் அவரின் கவர்ச்சியும் பிரமாண்டமாகப் பேசப்பட்டது.

ஏழு விவாகரத்து

ஏழு விவாகரத்து

எலிசபெத் டெய்லர் தன்னுடைய இல்லற வாழ்வில் எட்டு முறை திருமணம் செய்து ஏழு கணவர்களுடன் வாழ்ந்து சரித்திர சாதனை படைத்தவர். அதிலும் ரிச்சர்ட் பர்டன் என்பவரை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறையும் விவாகரத்து செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் கடந்த 2011ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

ஏலத்திற்கு வரும் பச்சை தேவதை

ஏலத்திற்கு வரும் பச்சை தேவதை

எலிசபெத் டெய்லருக்கு மிகவும் பிடித்த வண்ணம் பச்சை என்பதால் அவர் வாங்கிப் பயன்படுத்துவதும் பொருட்கள் பெரும்பாலும் பச்சை கலரிலேயே இருக்கும். அவர் மறைவிற்கு பின்பு அவர் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அவர் புகழின் உச்சியில் இருந்த 1960ஆம் ஆண்டுகளில் தனக்கு மிகவும் பிடித்தமான பச்சை வண்ணத்தில் வாங்கிப் பயன்படுத்திய பச்சை தேவதை (The Green Goddess) என்றழைக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. பச்சை ரோல்ஸ் ராய்ஸ் காரை சுமார் 20 ஆண்டுகள் வரை பயன்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை நிற கார் ஏலம்

பச்சை நிற கார் ஏலம்

எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய பச்சை ரோல்ஸ் ராய்ஸ் கார் இடது பக்க ஸ்டியரிங் உள்ள சில்வர் கிளவுட் II (Silver Coud II) மாடல் காராகும். இதோடு சேர்த்து மொத்தமே 20 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தன. அதில் தற்போது இரண்டு கார்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ரூ. 24 கோடிக்கு ஏலம் போகும்

ரூ. 24 கோடிக்கு ஏலம் போகும்

இவ்வளவு பெருமை வாய்ந்த பச்சை தேவதை ரோல்ஸ் ராய்ஸ் கார் வரும் ஆக்ஸ்டு 6ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏலம் விடப்போகிறது. குறைந்த பட்ச ஏலத்தொகை இன்னம் முடிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் அதிகபட்சமாக சுமார் 24 கோடி ரூபாய் வரையிலும் ஏலத்தில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது சந்தையில் விற்கப்படும் விலையை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+