அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறும் இலங்கை

டெல்லி: பொருளாதாரம் உள்ளிட்ட பிற துறைகளில் வளர்ந்துவிட்ட அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு கழிவுகளை கொட்ட ஆசியாவில் உள்ள சிறிய நாடுகளை குறிவைத்து வருகின்றன.

மருத்துவ உயிர்க்கழிவுகள், நச்சுக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஏற்றுமதி செய்து விடுகின்றன. இதை இங்குள்ள சில வியாபாரிகள் மறுசுழற்சிக்கான பொருள்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்கின்றன.

 அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறும் இலங்கை

இப்படி தங்கள் நாட்டுக் கழிவுகளை ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் முதலிடத்தில் இருப்பதாக பிபிசி தெரிவிக்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி பிற நாடுகளில் தங்கள் நாட்டு குப்பைகளை கொட்டுவதில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இப்படியாக இந்த நாடுகள் இலங்கைக்கு மட்டும் அனுப்பிய குப்பை 27,685 மெட்ரிக் டன். இந்த குப்பைகள் 130 கண்டைனர்களில் 12 தடவைகளுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னரும் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வணிகர்களின் முகவரிக்கு கொழும்பு துறைமுகத்திற்கு 100 கன்டெய்னர்கள் வந்துள்ளது. இந்த கண்டெய்னர்கள் கேட்பார் யாருமின்றி துறைமுகத்திலேயே இருந்துள்ளது. இவற்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. இதன்பிறகு துறைமுக அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் மருத்துவக் கழிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்யும் பழைய துணிகள், மெத்தைகள், பிளாஸ்டிக் பொருள்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை இறக்குமதி செய்த நிறுவனமும் இந்த பொருள்களை அதாவது மறு சுழற்சி செய்யும் பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனம். இப்போது இந்த பெயரில் சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய என்விரான்மென்டல் புரொட்டக்சன் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்போது இலங்கைக்கு இங்கிலாந்தில் இருந்து அனுப்பப் பட்டுள்ள இந்த பொருள்கள் பரிசோதிக்க முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளன. ஆகவே 111 கண்டைனர்களையும் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேற்கத்திய நாடுகளின் இந்த செயல் வளரும் நாடுகளில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், அதாவது இது போன்ற கழிவுகளை மறு சுழற்சி செய்ய முடியாது, மறு சுழற்சி செய்ய முடியாத நிலையில் இவை அப்படியே பூமியில் புதைக்கப்படுகின்றன. இப்படி புதைக்கப்படுவதன் விளைவு இவை அப்படியே மண்ணையும் அது சார்ந்த வளங்களையும் நாசப்படுத்துகின்ற்ன. இதனால் குடிநீர் ஆதாரங்கள் அளிக்கப்படுவதுடன், விவசாயமும் அடியோடு அழிந்துவிடும் அபாயத்தையும் உருவாக்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+