டெல்லி : கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டத்தில் இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தற்போது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிகரலாபம் 1,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆமாங்க. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 119.55 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்ட இந்த வங்கி, தற்போது இந்த அளவு நிகர லாபத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆமாங்க.. கடந்த ஆண்டை விட தற்போது வாராக்கடன் குறைந்துள்ளதோடு, சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் முதல் காலாண்டின் நிகரலாபமும், வருவாயும் அதிகரித்துள்ளது.
இதே ஜூன் 30 வுடன் முடிவடைந்த இந்த காலாண்டில், இந்த வங்கியின் வருவாய் 15.24 சதவிகிதம் அதிகரித்து, 21,405.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 18,574.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 27 சதவிகிதம் அதிகரித்து, 7,737 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 6,102 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
மேலும் நிகர வட்டி வரம்பு இலாபம் 3.19 சதவிகிதத்திலிருந்து, 3.61 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதே இதர வருவாய்கள் 15.74 சதவிகிதம் வீழ்ச்சிகண்டு, 3,851 கோடி ரூபாயிலிருந்து குறைந்து, 3,425 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஜூன் மாத காலாண்டில் அடிப்படையில் மொத்த வாராக்கடன் 8.81 சதவிகிதத்திலிருந்து, 6.49 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதிக் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வாராக்கடன் அளவு 41.4 சதவிகிதம் குறைந்து 3,495.73 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5,971.29 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்படாத சொத்துகளின் மதிப்பும் 45,763.08 கோடி ரூபாயாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வாராக்கடன் மதிப்பு 51 சதவிகிதம் குறைந்து,11,857 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 24,170 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 4.67 சதவிகிதமாக இருந்த வாராக்கடன், தற்போது 1.98 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாரக்கடன் குறைப்பே நிகரலாபம் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications