ளிபரம்பா : கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதே போல் தான் கேரளாவை சேர்ந்த அஜிதனுக்கும். ஏற்கனவே லாட்டரியால் லட்சாதிபதியான இவர், தற்போது மீண்டும் 5 கோடி பரிசை வென்று கோடீஸ்வரர் பட்டியியலில் இடம் பிடித்துள்ளார்.
ஆமாங்க.. கேரளா மாநிலம் தளிபரம்பு பகுதியைச் சேர்ந்த கோவில் ஊழியரான அஜிதன், 61 வயது, இவருக்கு தான் இப்படியொரு மாபெரும் அதிர்ஷ்டம்.. ஏற்கனவே லாட்டரியில் பரிசு விழுந்து குறிப்பிடத்தக்க அளவு வென்ற இவருக்கு மீண்டும் பரிசு விழுந்திருப்பது தான் தற்போது பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தியாகவே உள்ளதாம்.

அஜிதனுக்கு கேரள அரசு நடத்தும் லாட்டரி சீட்டு அடிக்கடி வாங்கும் பழக்கம் உண்டாம். இதில் என்ன கவனிக்க வேண்டியது என்னவெனில், கடந்த 2011-ம் ஆண்டிலேயே இவருக்கு கேரள லாட்டரியில் 40 லட்சம் ரூபாய் பணமும், 50 பவுன் நகையும் பரிசாக கிடைத்தது.
இந்த நிலையில் கிடைத்த இந்த பரிசு பணம் மூலம் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு சென்ற அஜிதன், அதன் பிறகும் கோவில் ஊழியர் வேலையையும் விடவில்லை. தொடர்ந்து பணியாற்றி கொண்டே தான் இருந்திருக்கிறார். இந்த நிலையில் லாட்டரி சீட்டு வாங்குவதையும் நிறுத்தவில்லையாம்.
ஆக தற்போது கேரள லாட்டரி நடத்திய மழைக்கால லாட்டரி குலுக்கலில், கோவில் ஊழியர் அஜிதனுக்கு முதல் பரிசாக ரூ.5 கோடி கிடைத்துள்ளதாம். இதனை அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளாராம்.
கேரள லாட்டரியில் 2011-ல் பரிசு பெற்ற அஜிதனுக்கு அடுத்த 8 ஆண்டில் மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதும், லட்சாதிபதியான அவர் ஒரே நாளில் கோடீஸ்வரரும் ஆகியுள்ளார்.
அஜிதநின் மனைவி சவிதா, ஒரு மகனும், மகளும் உள்ளனராம், மகன் அதுல் சவுதி அரேபியாவில் மெக்கானிக்கல் என்ஜினீயராக உள்ளாராம். அவரது மகள் அஞ்சனா பி.டெக். படித்து வருகிறாராம்.
இந்த நிலையில் இந்த லாட்டரி டிக்கெட்டை சட்ட ரீதியாக சில வேலைகளுக்காக கனரா வங்கியில், அஜிதன் மகன் ஒப்படைத்துள்ளாராம். எனினும் இதை நம்ப முடியாத அஜிதன் அரசு வெளியிடுவதற்கு முன்பு யாரிடமும் சொல்ல வேண்டாம் என நினைத்து தனது நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் மட்டுமே கூறி நெகிழ்ந்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications