டெல்லி : புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பழைய வாகனத்தை ஸ்கிராபுக்கு அளித்தால், புது வாகனத்துக்கு பதிவுக் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட உள்ளது.
ஒரு வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்யும் போது, அதற்குண்டான ஸ்கிராபிங் சான்றிதழ்களை வழங்கப்படுகிறது. இதை வைத்து வாங்கும் வாகனத்திற்கு பதிவு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

ஆமாங்க.. மத்திய அரசு பழைய வாகனங்களை 15 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தும் போது, சுற்றுசூழல் மாசுபாடு அதிகளவில் ஏற்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களைக் வாங்கும்போது, அந்த பழைய வாகனங்கள் மற்றொரு வாடிக்கையாளருக்கு விற்கப்படுகிறது.
இதனால் பழைய வாகனங்கள் தொடர்ந்து சாலைகளில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் சுற்றுச் சூழல் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாகனங்களை ஸ்கிராப் செய்வதன் மூலம், அந்த வாகனங்கள் உபயோகம் அதோடு நிறுதப்படும் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு ஸ்கிராப்புக்கு கொண்டு செல்வதன் மூலம், இந்த பழைய வாகனங்கள் உருகப்பட்டு புது வாகனங்களாக உருப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதையொட்டி புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி, இந்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் இப்படியொரு விதிமுறைக் கொண்டு வர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் படி இவ்வாறு வாகனங்களை அழிக்க உரிமம் பெற்ற நிறுவனத்திடன் இந்த வாகனங்களை கொடுத்து அழிக்கப்படும் போது, அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் இதற்காக ஒரு சான்றிதலை கொடுக்கும் என்றும். இந்த சான்றிதலை புதிய வாகனம் வாங்கும் போது கொடுத்தால் புதிய வாகனம் வாங்கும்போது பதிவு கட்டணம் இலவசமாக்கப்பட வாய்ப்புள்ளதாம்.
இதோடு அமைச்சகம் எலக்ட்ரானிக் இரண்டு மற்றும் மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் பதிவு கட்டணத்தை நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாம். இத்தகைய வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்று சூழலில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் என்றும் அரசு இதற்காக பரிந்துரைத்துள்ளதாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications