டெல்லி : அதானி குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்திரபிரதேசத்தில் மின் பரிமாற்றம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் 5,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, இந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறியுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது, கடந்த 2018ல் நடந்த உச்சி மாநாட்டில் நாட்டில் அறிவித்தது போல ஏற்கனவே இரண்டு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதோடு உணவு பதப்படுத்தும் பிரிவின் கீழ் அரிசி மற்றும் மாவு ஆலைகள், kachchi ghani சுத்திகரிப்பு வசதி மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த குழுமம் 5,000 கோடி ரூபாய் மின் சக்தி பரிமாற்றத்திலும், மேலும் 500 கோடி ரூபாயை உணவு பதப்படுத்தும் துறையிலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கௌதம் கூறியுள்ளார்.
இது மட்டும் அல்லாது தரவு மையம் மற்றும் பாதுகாப்பு (data centre and defence) துறையிலும் கவனம் செலுத்துவதற்காக தனது திட்டங்களைப் பற்றி பேசியவர், உத்திர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் இருப்பிடம், ஆகியவற்றை பொறுத்தவரை, உத்திரபிரதேசம் இது போன்ற துறைகளிலும் முன்னணியில் இருக்க முடியும் என்றும் என்றும் கூறியுள்ளாராம்.
Defence sector துறையை பொறுத்தவரை அதானி குழுமத்தின் பங்கு மிக முக்கியமானது. அதானி குழுமம் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு உற்பத்தி மையத்தை அமைப்பதே எங்களின் கனவு என்றும் கூறியுளார்.
மேலும் தனது குழுமம் மாநிலத்தில் உணவு தானிய சேமிப்பு திறனை மேம்படுத்துவதற்காக கண்ணாஜில் 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலகுகளை அமைத்துள்ளது. இதோடு ஏற்கனவே நீர் வழிப்பாதைகளை மேம்படுத்துவதற்காக வாராணாசியில் மல்டி மாடல் நதி முனையத்தை உருவாக்கும் பணியிலும் உருவாக்கும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது எல்லாவற்றையும் விட உத்திரபிரதேசம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக் முழுமையடையாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அதானி, பிரதமர் மோடியின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, உத்திரபிரதேசம் இல்லாமல் இலக்கை அடைவது கஷ்டம், அந்த இலக்கை அடைவதில் உத்திரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications