டெல்லி : இந்தியாவின் முதல் டிரில்லியன் மாநிலமாக உத்திர பிரதேசம் இருக்கக் கூடும் என்று, பிளிப்கார்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளாராம்.
ஆமாங்க.. உண்மைதான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, உத்திர பிரதேச மாநிலம், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட டிரில்லியன் டாலர் மாநிலமாக உத்திர பிரதேசம் இருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் உத்திரபிரதேசத்தை நாட்டில் தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்தியாவின் முதல் டிரில்லியன் டாலர் பொரூளாதாரமாக இருக்க வேண்டும் என்றும், இது சுமார் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை திட்டங்கள், கடந்த ஆண்டு உத்திரபிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத்தின் பார்வை மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவது, மாநிலத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
பிளிப்கார்டை பொறுத்தவரை உத்திரபிரதேசம் எங்களுக்கு ஒரு முக்கிய மாநிலமாகும். ஏனெனில் பல விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் எம்.எஸ்.எம்.இ உற்பத்தியாளர்கள், நாடு தழுவிய சந்தையில், தங்கள் தயாரிப்புகளை மிக திறமையாகவும், செலவு குறைந்த வகையிலும் விற்க அணுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டும்மில்லாமல் ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் பிளிப்கார்டுடனான கூட்டாண்மையுடன் வளர்ச்சியடைந்து, பான் இந்தியா சந்தையுடன் இணைவதால் இது மிக நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை புகுத்தி, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் பிளிப்கார்ட் பெருமிதம் கொள்கிறது. இதோடு பேஷன் தளமான Myntra மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு சந்தை அணுகலை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் கூறியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
முதமைச்சர் யோகியின் இந்த முயற்சிக்கு பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியவர், கடந்த பிப்ரவரி 2018ல், மாநில அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, 1,047 ஒப்பந்தங்களில் 4.68 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றும் குறிப்பிட்டுள்ளாராம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications