மும்பை : அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான மைண்ட் ட்ரீ நிறுவனத்தை, இந்திய நிறுவனமான எல் & டி வலுக்கட்டாயமாக வாங்க முயற்சிப்பதாக வர்த்தகத்துறையில் பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் அனைத்து பங்குகளை வாங்கிய பின்னர் எல்.& டி நிறுவனம் தற்போது முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.

இந்த மைண்ட்-ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலம், ஐடி துறை தொழில்களில் விற்பனை அளவில் 8-ம் இடத்தில் உள்ள எல் & டி இன்னும் முன்னிலைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.என். சுப்ரமண்யன் ஒரு முதலீட்டாளர் அழைப்பில், ஏற்கனவே தேர்தெடுக்கப்பட்ட, மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொறுப்பேற்பார் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறதாம். இந்த நிலையில் தொழில்துறை வட்டாரங்களில் காக்ணிசன்ட் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் & டெக்னாலஜி தலைவர் டெபாஷிஷ் சாட்டர்ஜி மைண்ட் ட்ரீயின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க முன்னணியில் உள்ளாராம். ஆமாங்க.. காக்ணிசன்டில் ஜூலை 31 தேதியோடு அவரது பதவிக்காலம் தேதியுடன் முடிவடையும்.
எல் & டி கையகப்படுத்திய பின்னர் புதிய உறுப்பினர்களைத் சேர்க்கப்பட்ட பின்னர் முதல் முறையாக முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை உரையாற்றிய சுப்ரமண்யன், தான் சந்தித்த சில வாடிக்கையாளர்கள் தங்களூக்கு சாதகமான கருத்துக்களை அளித்துள்ளதாகவும், அதோடு எல்.& டி கையகப்படுத்தியதை வரவேற்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் நல்ல வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக வேகத்தையும் அதிகரித்து வருகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மைண்ட் ட்ரீக்கு பல வருவாய் இருந்ததால், முதலில் கவனம் செலுத்த வேண்டியது இல்லை என்பதால், புதிய நிர்வாகம் வாடிக்கையாளர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications