காந்தி நகர், குஜராத்: இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea நிறுவனம் தன் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான மூன்று மாத கால காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இங்கு Vodafone Idea நிறுவனத்தின் ஸ்டாண்டலோன் காலாண்டு முடிவுகளை மட்டுமே பார்க்க இருக்கிறோம்.
ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு இந்தியாவில் ஏதாவது டெலிகாம் நிறுவனத்தால் நல்ல வருவாய் கூட காண முடியாத போது, நிகர லாபத்தை எப்படிப் பார்க்க முடியுமா என்ன..?
அதே கதை தான் இந்த ஜூன் 2019 காலாண்டிலும். Vodafone Idea நிறுவனம், ஜூன் 2019 காலாண்டில் மட்டும் சுமார் 5,038 கோடி ரூபாய் நிகர நட்டம் கண்டிருக்கிறது.
நட்டக் கணக்கு
கடந்த மார்ச் 2019 காலாண்டில் இதே Vodafone Idea நிறுவனம் சுமார் 4,927 கோடி ரூபாயை நிகர நட்டமாகக் காட்டியது. அதற்கு முந்தைய டிசம்பர் 2018 காலாண்டில் 5,033 கோடி ரூபாயை நிகர நட்டமாகக் காட்டியது. அதர்கு முந்தைய செப்டம்பர் 2018 காலாண்டில் 4,988 கோடி ரூபாயை நிகர நட்டமாகக் காட்டியது குறிப்பிடத்தக்கது. ஆக எப்படியும் காலாண்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் நிகர நட்டம் காட்டுவது Vodafone Idea நிறுவனத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.
இணைப்பு
கடந்த ஜூன் 2018 காலாண்டில் நிகர லாபம் 577 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஜூன் 2018 நிகர லாபத்தை ஜூன் 2019 நிகர நட்டத்தோடு ஒப்பிட்டால் சுமார் 970 சதவிகிதம் நட்டம் அதிகரித்திருப்பதை அமைதியாகச் சொல்கிறது Moneycontrol வலைதளம். ஆனால் கடந்த ஆகஸ்ட் 2018-ல் தான் Vodafone Idea நிறுவனம் ஒன்றாக முழுமையாக இணைக்கப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
பெத்த வருவாய்
கடந்த டிசம்பர் 2018 காலாண்டு தொடங்கி ஜூன் 2019 காலாண்டு வரை வருவாய் ஒவ்வொரு காலாண்டும் சுமார் 11,200 - 11,600 கோடி ரூபாயை ஈட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் லாபம் தான் அதிகரிக்கவில்லை. வருவாயில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கடந்த ஜூன் 2018 காலாண்டில் 5,804 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் போது 577 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய நிறுவனம், இன்று 11,200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் போது கூட தன் பழைய 577 கோடி ரூபாய் லாபம் கூட ஈட்ட முடியாமல் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் இழப்பு
மேலே சொன்ன வருவாய் இழப்பு கணக்கை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டுப் பார்த்தால், இன்னொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறது Vodafone Idea. கடந்த ஏப்ரல் - ஜூன் 2019 காலாண்டில் சுமார் 14 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது Vodafone Idea. காரணம் குறைந்தபட்ச கட்டாய ரீசார்ஜ் என்கிறார்கள் டெலிகாம் அனலிஸ்டுகள். அதோடு இன்று காலை Vodafone Idea நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான உடனேயே பங்குச் சந்தையில் Vodafone Idea நிறுவன பங்கின் விலை சுமார் 24% சரிந்து விற்பனையாகி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications