அமேசான் அதிரடி முடிவு.. ஆடிப்போன ஸ்விக்கி, சோமேட்டோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் கொடிக்கட்டி பறந்து வந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து அமைதியாக இந்தியா வந்து இறங்கியது அமேசான். முதல் 8 மாதம் இருக்கும் இடம் கூடத் தெரியாமல் இருந்த அமேசான் சிவாஜி ரஜினியின் சிங்க பாதை போல் ஒட்டுமொத்த ஆன்லைன் வர்த்தகத்தையும் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொண்டது. அப்போ விழுந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்கள் இன்று வரை அந்தச் சரிவிலிருந்து மீள முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் அமேசான் இந்தியா புதிய வர்த்தகத்தில் இறங்க உள்ளதாகச் செய்திகள் பரவி வருகிறது.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

இந்தியா போன்ற நுகர்வோர் அதிகமாக இருக்கும் நாடுகளில் வர்த்தகச் சந்தையைப் பெறுவது என்பது சாதாரணக் காரியமில்லை. அதில் அமேசான் ஆரம்பம் முதல் சிறந்து விளங்குகிறது.

இதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்றும், இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வர்த்தகம் பெற வேண்டும் என்றும் அமேசான் இந்தியா தனது சேவைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

 

புதிய வர்த்தகம்

புதிய வர்த்தகம்


இதன் படி தற்போது அமேசான், இந்தியாவில் பரபரப்பாக இருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அமேசான் இந்தியா, அமெரிக்க ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

 

உபர் ஈட்ஸ்

உபர் ஈட்ஸ்

உபர் நிறுவனம் இந்தியாவில் பெரு நகரங்களை மட்டும் குறிவைத்து ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாக உணவு டெலிவரி சேவையைத் துவங்கியது.

இந்த வர்த்தகம் போதிய நிதி இல்லாத காரணத்தால் உபர் அதை அப்படியே இயக்கி கொண்டு இருக்கிறது.

 

டீல்

டீல்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமேசான் நிறுவனம் உபர் ஈட்ஸ் வர்த்தகத்தை முழுமையாக வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்று இரு அமெரிக்க நிறுவனங்களும் ஒப்புக்கொண்டு உள்ளது.

பிரச்சனை ஆரம்பம்

பிரச்சனை ஆரம்பம்

ஏற்கனவே ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில், தற்போது இந்தப் போட்டியில் அமேசான் நிறுவனமும் இறங்கியுள்ள நிலையில் போட்டி மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் எனத் தெரிகிறது.

 

 

மக்களுக்குக் கொண்டாட்டம்

மக்களுக்குக் கொண்டாட்டம்

ஆரம்பக்கட்ட போட்டிகள் இரு நிறுவனங்கள் மத்தியிலும் நிறைவுற்ற லாபத்தைப் பார்க்க இரு நிறுவனங்களும் துவங்கியுள்ள இந்தத் தருணத்தில் அமேசானின் என்டரி இரு நிறுவனங்களும் வர்த்தக ரீதியிலும், வருவாய் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த மும்முனை போட்டியால் மக்களுக்கு அதிரடி பம்பர் தள்ளுபடிகள் கிடைப்பது நிச்சயம்.

 

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

ஏற்கனவே அமேசான் இந்தியாவில் வீடியோ & இசை, அலெக்சா, ஷாப்பி, பேமெண்ட் போன்ற சேவைகளை அளிக்கும் நிலையில் இனி உணவையும் அமேசானிலேயே ஆர்டர் செய்துகொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon might enter into Food Delivery, Swiggy, Zomato in shock

Ecommerce major Amazon India is reportedly in talks to acquire the Indian arm of Uber Eats, which is the food delivery vertical of global ride-hailing company Uber.
Story first published: Wednesday, July 31, 2019, 7:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X