பாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்..

மும்பை : மலிவான எரிபொருள் விலை, புதிய விமானங்கள் மற்றும் கடைசி நிமிட விற்பனை காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை, கிட்டதட்ட பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதாம்.

ஆமாங்க.. மலிவான எரி பொருள் விலை காரணமாக, விமான டிக்கெட்களின் விலை மிக குறைந்துள்ளதாக, போக்குவரத்து சம்பந்தமான ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாம். மேலும் புதிய விமானங்கள், மற்றும் கடைசி நிமிட விற்பனை மற்றும் பாகிஸ்தானிய வான்வெளி திறப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகள் விலையை மேலும் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சராசரியாக உள்நாட்டு ஒரு வழித்தடங்களின் கட்டணம், முந்தைய ஆண்டை விட ஒப்பிடும்போது தற்போது 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆன்லைன் தளமான Ixigo தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

சராசரியாக 40 – 45% விமான கட்டணம் குறைந்தது!

சராசரியாக 40 – 45% விமான கட்டணம் குறைந்தது!

அதிலும் மும்பை - ஹைதராபாத் கட்டணம் 39 சதவிகிதம் குறைந்தும், மும்பை முதல் சென்னை வரையிலான கட்டணம் 62 சதவிகிதம் குறைந்தும், மும்பை முதல் பெங்களுரு வரையிலான கட்டணம் 33 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Ixigo நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான அலோக் பாஜ்பாய் இது குறித்து கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கான சராசரி கட்டணங்கள், கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் 40 - 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடைசி நிமிட விற்பனை அதிகரிப்பு!

கடைசி நிமிட விற்பனை அதிகரிப்பு!

மேலும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுவும் கூட இந்த கட்டணம் குறைதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடைசி நிமிட விற்பனையும் இந்த விலை குறைப்புக்கு வழி கோரியதாகவும் Ixigo நிறுவனம் கூறியுள்ளது.

அதிகளவில் கட்டணம் குறையவில்லை

அதிகளவில் கட்டணம் குறையவில்லை

இதேபோல் யாத்ரா.காமில் டெல்லி - மும்பை, டெல்லி - ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள், கடந்த ஆண்டே ஒரளவு விலை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் டெல்லி - மும்பை கட்டணம் கடந்த ஆண்டை விட வெறும் 1.31 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாகவும், இதுவே மும்பை முதல் டெல்லி வரையிலான கட்டணம் 1.8 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் டெல்லி - மும்பை வரையிலான வழித்தடம் மிக பிசியான, அதிக தேவையுள்ள வழித்தடம் என்றும் யாத்ரா கூறியுள்ளது.

வெளிநாட்டு விமான கட்டணங்கள் படு வீழ்ச்சி

வெளிநாட்டு விமான கட்டணங்கள் படு வீழ்ச்சி

இதே நேரத்தில் முக்கிய வெளிநாட்டுக் விமான கட்டணங்களும் குறைந்துள்ளதாம். யாத்ரா அறிக்கையின் படி, மும்பை முதல் பாங்காக் வரையிலான கட்டணம் 34.58 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதுவே மும்பை முதல் சிங்கப்பூர் வரையிலான கட்டணம் சராசரியாக 9 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே ஒரே வழித்தடமான கொல்கத்தா- துபாய் வரையிலான விமான கட்டணம் கடந்த மே மாததில் 18,113 ரூபாயாக இருந்தது. இதுவே ஜூலை மாதத்தில் 10,742 ரூபாயாக குறைந்துள்ளதாம். மேலும் புதுடெல்லி - பாங்காங் வரையிலான கட்டணம் கடந்த மே மாதத்தில் 16,740 ரூபாயாக இருந்தது. இது தற்போது ஜூலை மாதத்தில் 7,712 ரூபாயாக குறைந்துள்ளதாம்.

பாகிஸ்தான் வான் எல்லை அனுமதியாலும் கட்டணம் குறைப்பு

பாகிஸ்தான் வான் எல்லை அனுமதியாலும் கட்டணம் குறைப்பு

அதே போல ஜூலை 16 முதல் பாகிஸ்தான் வான் எல்லையில் இந்தியா விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டதால் விலை இன்னும் குறைய வழிவகுத்தது என்றும், குறிப்பாக வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கட்டணங்களை குறைக்க இது உதவியது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நீண்ட தூரம் போக வேண்டியதில்லை. இதனால் எரிபொருளும் மிச்சமானது. செலவுத் தொகை மிச்சமாவதால் கட்டணங்கள் விலையும் குறைந்தது என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானால் நேரமும் பணமும் மிச்சம்

பாகிஸ்தானால் நேரமும் பணமும் மிச்சம்

அதிலும் பாகிஸ்தான் தடை நீக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு 35 - 40 சதவிகிதம் டிக்கெட்களின் விலை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வான்வெளி தடங்கள் மூடப்பட்ட போது போக்குவரத்து நேரம் 1.5 மணி நேரங்கள் கூடியிருந்தாக கூறப்படுகிறது. அதோடு கட்டணமும் ரூ40,515 ரூபாயாக இருந்தது, ஆனால் இது தற்போது 26,700 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+