டெல்லி, இந்தியா: நேற்று (ஜுலை 30, 2019) செவ்வாய்க்கிழமை, இந்திய Railways நிர்வாகம், தன் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பிய கடிதம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறது. Railways நிவாகம் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 30 ஆண்டு பணியை நிறைவு செய்தவர்கள் விவரங்களைச் சேகரித்து ஒரு வழக்கமான செயல்பாட்டு பரிசீலனை செய்யச் சொல்லி இருந்ததாம்.
ஆனால் இந்திய Railways வயதானவர்கள் மற்றும் சரியாக வேலை செய்யாதவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கத் தான் இந்த ஊழியர்கள் செயல்பாட்டு பரிசீலனை வேலையைச் செய்யச் சொன்னதாக செய்திகள் காட்டுத் தீ போல பரவத் தொடங்கின.

இந்திய Railways ஊழியர்களின் செயல்பாட்டை மதிப்பிட்டு பரிசீலிப்பது Railways ஸ்தாபன விதிகள் படி நடத்தப் பட வேண்டிய ஒன்று தான். அதை ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் நலனுக்காக கட்டாயம் நடத்தியே தீர வேண்டும் என இந்திய Railways மெல்ல வாயைத் திறந்து சொல்லி இருக்கிறது. இது போல கடந்த ஆண்டுகளிலும் இந்திய ரயில்வே ஊழியர்களின் பணி தொடர்பாக மதிப்பீடு மற்றும் பரிசீலனைகள் நடந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் ரயில்வே நிர்வாகத்தினர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2014 முதல் 2019 வரையான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் இதுவரை மொத்தம் 1,84,262 பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். இனி வரும் காலங்களில் 2,83,637 பேரை புதிதாக வேலைக்கு எடுப்பது தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்களாம். இந்த 2.83 லட்சம் பணி இடங்களில், இதுவரை 1.41 லட்சம் பணியாளர்களுக்கான தேர்வுகளை ஏற்கனவே நடத்தி விட்டார்களாம். இன்னும் சில மாதங்களில் இந்த 1.41 லட்சம் பேர் முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் இந்திய Railways நிர்வாகம் சொல்லி இருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இந்திய ரயில்வே லக்னெள முதல் டெல்லி வரை பயணிக்கக் கூடிய தேஜாஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை தனியார் இயக்க அனுமதி கொடுத்தது. இப்போது ஊழியர்கள் செயல்பாட்டு பரிசீலனை விவகாரத்தில் அரசு தலையிடுவதாகத் தெரிகிறது. இன்னும் இந்திய ரயில்வேஸில் என்ன என்ன விஷயங்களில் எல்லாம் மத்திய அரசு தலையிடப் போகிறது எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications