பிரமோத் மிட்டலுக்கு ரூ.96 கோடி பிணையம்.. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போஸ்னியா : மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் போஸ்னியா நாட்டில் கடந்த ஜூலை 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது சுமார் 96 கோடி ரூபாய் பிணையமாக கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாராம்.

இந்தியாவை சேர்ந்த ஸ்டீல் மேக்னட் என்ற உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின், சகோதரர் தான் பிரமோத் மிட்டல். இவர் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார்.

பிரமோத் மிட்டலுக்கு ரூ.96 கோடி பிணையம்.. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

இந்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல், அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அரசு வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இவர் குறைந்தது ஐந்து மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, $2.8 மில்லியன்) மோசடி செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

உலகளாவிய ஸ்டீல் உலகின் ஜாம்பவானான ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டலின், சகோதரர் பிரமோத் மிட்டலை பிணை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது 96 கோடி ரூபாய் பிணையமாக கட்டி (12.5 மில்லியன் யூரோ) ஜாமீனில் வெளியிடப்பட்டுள்ளாராம்.

மேலும் தற்போது கடந்த 2006 - 2015 வரையிலான காலத்தில், coking plantல் இருந்து 11 மில்லியன் யூரோக்களை இடம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரமோத் மிட்டல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், தற்காலிக தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து அனைத்தும் நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

மேலும் இவர்கள் பொது விதிகளை மீறக்கூடாது என்றும், விமானத்தில் மற்ற நாடுகளுக்கு செல்லக் கூடாது என்றும், எந்த வித குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், 12.5 மில்லியன் யூரோக்களை கட்டிய பின்பு நிபந்தனை ஜாமீனில் தான் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bail ஜாமீன்
English summary

Lakshmi Mittal's brother released from Bosnia's jail after pay of Rs.96 crore

Lakshmi Mittal's brother released from Bosnia's jail after pay of Rs.96 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X