அசிம் பிரேம்ஜி பை பை.. விப்ரோ எதிர்காலம் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஜூலை 30ஆம் தேதி தனது பதவி மற்றும் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து இந்த முக்கியமான பதவியில் அசிம் பிரேம்ஜி-யின் மகன் ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

பொதுவாக வாரிசு ஆதிக்கம் வர்த்தகம் துறையில் சகஜமான விஷயம் தான், தற்போது அரசியலிலும் இது இருப்பது வேதனையான ஒன்று என்றாலும் கிட்டத்தட்ட 9 பில்லியின் டாலர் மதிப்புமிக்க விப்ரோ சாம்ராஜ்யத்தை ஆள ரிஷாத் தகுதியானவரா..?

எண்ணெய் நிறுவனம்

எண்ணெய் நிறுவனம்

ஒரு சாதாரண எண்ணெய் விற்பனை நிறுவனமாக இருந்த விப்ரோ இன்று நாட்டின் மிக முக்கிய ஐடி நிறுவனமாக உருவாகியுள்ளது. தனது ஆரம்பத்தை மறக்கக் கூடாது என்பதற்காகத் தான் விப்ரோ லோகோ-வில் சூரியகாந்தி பூ இடம் பெற்று இருக்கும்.

இன்றைய மதிப்பில் சுமார் 8.5 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்படும் விப்ரோ நிறுவனத்தை இதுநாள் வரையில் அசிம் பிரேம்ஜி கட்டிக்காத்து வந்த நிலையில், 74 வயதில் ஓய்வு பெறுகிறார்.

 தலைமை மாற்றம்

தலைமை மாற்றம்

அசிம் பிரேம்ஜி ஓய்வு பெறும் காரணத்தால் இப்பதிவில் தற்போது ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டு, ஜூலை 31ஆம் தேதி முதல் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகத் தனது பணியைத் துவங்க உள்ளார்.

ரிஷாத் பிரேம்ஜிக்குத் தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்பாக வாழ்த்துக்கள். சரி ரிஷாத் இந்தப் பதவிக்குத் தகுதியானவரா..?

ரிஷாத் பிரேம்ஜி கல்வி
 

ரிஷாத் பிரேம்ஜி கல்வி

உலகின் பல வர்த்தக மேதைகள் படித்து ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூலில் MBA பட்டமும், வெஸ்லேயன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டமும் பெற்றார்.

2014 இல் இவரை உலகப் பொருளாதார அமைப்பு இளம் உலகளாவிய தலைவர் பட்டம் கொடுத்துக் கவரவம் செய்தது.

விப்ரோ-க்கு முன்

விப்ரோ-க்கு முன்

விப்ரோ நிறுவனத்தில் சேரும் முன் ரிஷாத், லண்டன் பெயின் அண்ட் கம்பெனி நிறுவனத்தில் பணியாற்றினார். இந்நிறுவனத்தில் ரிஷாத் நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல், டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் பிரிவுகளில் பணியாற்றினார்.

இதோடு அமெரிக்காவில் இருக்கும் GE கேப்பிடல் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.

2007 முதல் விப்ரோ

2007 முதல் விப்ரோ

2007ஆம் ஆண்டு முதல் ரிஷாத் விப்ரோ தலைமை குழுவிலிருந்து வந்த நிலையில், மே 2015 முதல் விப்ரோ தலைமை நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இணைந்தார்.

இதன் பின் விப்ரோ நிறுவனத்தின் தலைமை மூலோபாயம் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் தான் கடந்த 4 வருடங்களாக விப்ரோ பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் பணியிலும் ரிஷாத் ஈடுபட்டு இருந்தார்.

இலக்கு

இலக்கு

2015இல் நிர்வாகக் குழுவில் இணைந்த போது அவருக்கு 100 பில்லியன் கொடுக்கப்பட்டது. இதை வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்து நிறுவனத்திற்குப் புதிய வர்த்தகத்தைக் கொண்டு வரப் பயன்படுத்த வேண்டும் என ரிஷாத்-க்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுநாள் வரையில் பொறுமையாக ஆலோசித்து 65 மில்லியன் டாலர் தொகையைச் சுமார் 18 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து 100க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார்.

வாரிசு

வாரிசு

எல்லாவற்றுக்கும் மேலாக ரிஷாத், அசிம் பிரேம்ஜி-யின் வாரிசு. இதை விட வேற என்ன தகுதி வேண்டும். இது ஒருபக்கம் இருந்தாலும் ரிஷாத் கிட்டத்தட்ட 12 வருடங்களாக விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்துள்ளார். இந்த அனுபவம் போதுமானதாகத் தெரிகிறது.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

நாட்டு மக்களுக்காகச் சுமார் 50,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த மாபெரும் மனிதர் அசிம் பிரேம்ஜி இவர் விப்ரோ நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பணியிலிருந்து விலகினாலும் அவர் non-executive director ஆகத் தொடர்வார் என விப்ரோ தெரிவித்துள்ளது.

அபித் அலி நீமுச்வாலா

அபித் அலி நீமுச்வாலா

இதோடு விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அபித் அலி நீமுச்வாலா ஜூலை 31 முதல் நிர்வாக இயக்குநராகப் பதவி உயர்வு பெறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rishad Premji to take over Wipro: Azim premji says bye bye

After having converted a cooking oil company into a $8.5 billion IT behemoth, Azim Premji retires today as Wipro chairman and managing director.Wipro had announced last month that its board has approved the appointment of Rishad Premji as executive chairman of the company with effect from July 31.
Story first published: Wednesday, July 31, 2019, 7:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X