கவுஹாத்தி : நாளுக்கு நாள் மக்களிடையே டீயின் மோகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், மிகவும் அரிய வகை தேயிலையான மனோகரி கோல்டு தேயிலை ரகம், 24 காரட் தங்கத்தை விட அதிகமாக ஏலம் போயுள்ளது.
ஆமாங்க.. ஒரு கிலோ மனோகரி கோல்டு தேயிலை கிலோ 50,000 ரூபாயாக ஏலம் போயுள்ளது.
இந்த அரிய வகை, தனித்தன்மை வாய்ந்த மனோகரி கோல்ட் தேயிலை ரகம் இந்த ஆண்டு ஒரு கிலோ 50,000 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு இந்த தேயிலை 39,000 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு தான் மிகவும் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது என்றும் கூறப்படுக்கிறது.
அரிய வகை தேயிலை, அதிக விலைக்கு ஏலம்!
இந்தியாவில் தேயிலை உற்பத்தி முதலிடத்தில் இருக்கும் அசாம் தேயிலை தோட்டத்தில் பயிராகும் இந்த அரிய வகை தேயிலை தான், கவுஹாத்தியில் நடைபெற்ற தேயிலை ஏல மையத்தில் கடந்த புதன் கிழமையன்று அதிகபட்ச விலைக்கு ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த விலையே இதுவரை ஏலம் போனதில் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை
தங்க இலை சருகு போன்ற இந்த கருப்பு கலரான இந்த தேயிலை ரகம் கடந்த ஆண்டு, ஒரு கிலோ ரூ. 39,000 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள டோன்யி போலோ டீ எஸ்டேட் ரகம் 40,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.ஆனால் இவ்வாறு நடத்தப்பட்ட பொது ஏலங்களில் ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபாய்க்கு செல்வது இதுவே முதல் முறை என்றும், கவுஹாத்தி தேயிலை ஏலமையத்தின் செயலர் தினேஷ் பிஹானி தெரிவித்துள்ளார்.
மொத்த உற்பத்தியே 5 கிலோதான்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், மிகவும் அரிய வகையான இந்த தேயிலை இந்த ஆண்டு மொத்தமே 5 கிலோதான் பயிரானதாம். மேலும் இந்த தேயிலை விளைவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாததே விளைச்சல் குறைவுக்குக் காரணமாகும். இந்த தேயிலை ரகமானது தேயிலை சிறிய மொட்டு களிலிருந்து பெறப்படுவதாகும். மேலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த தேயிலை பறிக்கப்பட வேண்டுமாம். ஏனெனில் இதன் அபார சுவையையும், நறுமணத்தையும் சூரியன் தாக்கிவிடக் கூடாது என்பதால் இந்த நேரத்தில் பறிக்கப்படுவதாகவும் கூறுகிறார். இதனாலேயே இதை தயாரிப்பது மிகவும் சிரமமான விஷயம் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.
மொட்டுகளிலிருந்து பெறப்படும் அரிய தேயிலை
பொதுவாக தேயிலையானது இலைகளில் இருந்து பெறப்படுவது. ஆனால் இந்த ரக தேயிலை அதன் மொட்டுகளிலிருந்து பெறப்படுவது என்றும், இவ்வாறு பெறப்பட்டதில், கடந்த ஆண்டு இந்த ரக தேயிலையை 2 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், எனினும் இந்த ஆண்டு 5 கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மனோஹரி தேயிலை தோட்ட அதிபர் ராஜன் லோஹியா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications