டெல்லி, இந்தியா: இந்தியாவின் Automobile உற்பத்தியாளர்கள், கடந்த ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான (2019- 20 நிதி ஆண்டுக்கான) முதல் காலாண்டில் தங்கள் உற்பத்தியை சுமார் 11 சதவிகிதம் குறைத்திருக்கிறார்களாம்.
இந்த ஜூன் 2019 காலாண்டில் மொத்தம் 60,85,406 வாகனங்களைத் தான் விற்க முடிந்ததாம். ஆனால் ஜூன் 2018 காலாண்டில் மொத்தம் 69,42,742 வாகனங்களை விற்க முடிந்திருக்கிறதாம்.
ஜூன் 2019 காலாண்டில், அதற்கு முந்தைய ஜூன் 2018 காலாண்டை விட, உள்நாட்டில் Automobile விற்பனை சுமார் 12 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். இந்திய Automobile துறையில் பயணிகள் வாகனங்கள் தொடங்கி, வணிக கண ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வரை அனைத்து பிரிவிலும் உற்பத்தியைக் குறைத்திருக்கிறார்களாம்.
வாகன வாரியாக
ஜூன் 2018 காலாண்டில் தயாரித்த வாகனங்களை விட, ஜூன் 2019-ல் பயணிகள் வாகனங்கள் உற்பத்தியில் 12 சதவிகிதம் குறைவாகவே உற்பத்தி செய்திருக்கிறார்களாம்.
அதே போல ஜூன் 2018 காலாண்டில் தயாரித்த வாகனங்களை விட, ஜூன் 2019-ல் வணிக பயன்பாட்டுக்கான கண ரக வாகனங்கள் உற்பத்தியில் 14 சதவிகிதம் குறைவாகவே உற்பத்தி செய்திருக்கிறார்களாம்.
இந்த உற்பத்திக் குறைவு இருசக்கர வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை. ஜூன் 2018 காலாண்டில் தயாரித்த இருசக்கர வாகனங்களை விட, ஜூன் 2019-ல் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் 10 சதவிகிதம் குறைவாகவே உற்பத்தி செய்திருக்கிறார்களாம்.
பயணிகள் வாகனம்
இந்த உற்பத்திக் குறைவில் இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி சுமார் 15 சதவிகிதம் தன் உற்பத்தியை, இந்த ஜூன் 2019 காலாண்டில் குறைத்திருக்கிறார்களாம். குறிப்பாக தங்கள் கையில் இருக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தான் இந்த உற்பத்திக் குறைவையே மேற்கொண்டு இருக்கிறார்களாம். இந்தியாவின் எல்லா Automobile உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டிருக்கும் போது ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலாண்டில் ஹியூண்டாய் (Hyundai) மட்டும் தன் உற்பத்தியை 3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறார்களாம்.
வணிக வாகனங்கள்
இந்திய வணிக வாகன உற்பத்தியில் பெரிய ஆட்களான டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்களும் முறையே 12 மற்றும் 25 சதவிகித உற்பத்தியைக் குறைத்துக் கொண்டார்களாம். இந்தியாவின் வணிக வாகனங்களுக்கான சரக்கு கையிருப்பு சுமார் 55 - 60 நாட்களாக அதிகரித்திருக்கிறதாம். கடந்த மே 2019-ல் இந்த எண்ணிக்கை 45 - 50 நாட்களாக இருந்தது, ஜூனில் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனம்
இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூன் 2018 காலாண்டில் உற்பத்தி செய்ததை விட ஜூன் 2019 கலாண்டில் சுமார் 11 சதவிகிதம் தன் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதாம். அதே போல ஹோண்டா இந்தியா நிறுவனமும் தன் உற்பத்தியை 23 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்களாம். வாகன உற்பத்தியாளர்கள் கையில் சரக்கு தங்கி இருப்பதோடு, டீலர்கள் கையில் மோசமான அளவில் சரக்கு கையில் தேங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆட்டோமொபைல் சங்கத்தினர்கள்.
டீலர்கள் கவலை
இருசக்கர வாகனங்களை விற்கும் டீலர்களிடம் ஜூன் 2019 நிலவரப்படி கையில் 60 - 65 நாட்களுக்கான சரக்குகள் இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சம்மேளனம் (Federation of Automobile Dealers Association) சொல்கிறார்கள். இது கடந்த மே 2019-ல் இருசக்கர வாகனங்களை விற்கும் டீலர்களிடம் 55 - 60 நாட்களுக்கு சரக்கு தேங்கி இருந்ததாம். ஆக ஒரு மாதத்தில் கையில் தேங்கும் சரக்கின் அளவு இன்னும் அதிகரித்திருக்கிறது. வரும் செப்டம்பர் 2019-க்குள் டீலர்களின் கையில் இருக்கும் சரக்கு அளவை 21 நாட்களுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் டீலர்கள்.
வேலை இழப்பு
எனவே இனி வரும் மாதங்களிலும் வாகன உற்பத்தி இன்னும் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இந்தியாவில் Automobile உற்பத்தி பணிகளில் 70 சதவிகிதம் பேர் ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை பார்த்து வருகிறார்கள். ஒருவேளை உற்பத்தி சரிவு மேலும் அதிகமானால், லே ஆஃப் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். இந்த லே ஆஃபில் சுமார் 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என Automobile உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சொல்லி இருந்தது தான் நினைவுக்கு வந்து நம்மை பயமுருத்துகிறது. ஏற்கனவே இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை. இதில் புதிதாக 10 லட்ச பேருக்கு வேறு வேலை இழப்பு ஏற்படும் என்றால் என்ன தான் செய்வது..?


Click it and Unblock the Notifications