அசிங்கப்பட்ட ஏர்டெல்.. 14 வருடத்தில் முதல் முறையாக நடந்த சம்பவம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் துறையில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் கொடிகட்டிப் பறந்த ஏர்டெல் நிறுவனம், கடந்த சில வருடங்களாகக் கடுமையான வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் என்றால் யாராலும் மறுக்க முடியாது.

 

டெலிகாம் துறையில், தான் வைத்துத் தான் சட்டம், தான் வைத்தது தான் விலை என லாபத்தில் துள்ளிக்குதித்த ஏர்டெல் 14 வருடத்தில் முதல் முறையாகத் தற்போது நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

சரிப்படாது

சரிப்படாது

முதல் இடத்திற்குப் போட்டிப் போட்டு வந்த ஏர்டெல் இனி ஜியோ-வுடன் போட்டிப் போட்டு சரிப்படாது என முடிவிற்கு வந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என்ற மோசமான நிலைக்கு வந்துவிட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாகவே வர்த்தகப் போட்டியில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் ஏர்டெல் தள்ளியே இருந்தது. இதன் எதிரொலி தான் 14 வருட வரலாறு.

ரூ.2,900 கோடி ரூபாய் நஷ்டம்

ரூ.2,900 கோடி ரூபாய் நஷ்டம்

பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த 14 வருடத்தில் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அட 10 கோடி, 100 கோடின்னா கூடப் பரவாயில்லை. கிட்டத்தட்ட 2866 கோடி ரூபாய் மொத்த நஷ்டமாக அறிவித்துள்ளது. இதைக்கேட்ட பல முதலீட்டாளர்களுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்.

கடந்த சில காலாண்டுகளாக ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவீடுகள் குறைந்து வருவது உண்மை தான், ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்ட அளவீடு என்பது மிகப்பெரியது.

இவ்வளவு பெரிய நஷ்டத்திற்கு என்ன காரணம்..?
 

இவ்வளவு பெரிய நஷ்டத்திற்கு என்ன காரணம்..?

என்ன காரணம்..?

விலை போரில் இருந்து இந்திய டெலிகாம் மீண்டு வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தக் காலாண்டில் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளிற்கு லாபம் பெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏர்டெல் நிறுவனத்திக்கு இது அவமானமாக அமைந்தது.

இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை மேம்படுத்துவதற்காகவும், நிதியியல் செலவுகள் காரணமாகவும் அதிகளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

வருமானம்

வருமானம்

ஜூன் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தின் மூலம் சுமார் 15,344.6 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் 0.7 சதவீதம் அதிகம், அதேபோல் கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் வெறும் 3 சதவீதம் மட்டுமே அதிகம்.

ஜியோ

ஜியோ

இதே காலாண்டில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ 11,679 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

இதனுடன் ஜியோ நிறுவனத்தின் சராசரி வாடிக்கையாளர் வருமானத்தின் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 129 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் அதிகம்.

ஏர்டெல் ஆரம்பம்

ஏர்டெல் ஆரம்பம்

1995இல் துவங்கப்பட்ட ஏர்டெல் நிறுவனம் சந்தையில் சுமார் 24 வருடமாக இயங்கி வருகிறது. ஆரம்பக் காலத்தில் சில சரிவைச் சந்தித்தாலும் விளம்பரத்தின் வாயிலாகப் பெருமளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.

அதன் பின் தொடர்ந்து சேவை தரத்தை உயர்த்துவதன் மூலமும், இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை வலிமைப்படுத்தியதன் வாயிலாகவும் நாட்டின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமாக இருந்தது.

ஆனால் இது அனைத்தும் ஜியோ வந்த பின்பு மாற்றியது என்பதை ஏர்டெல் நிறுவனத்தால் இன்றும் தாங்க முடியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel posts 1st consolidated loss in 14 years

Bharti Airtel reported a consolidated net loss of Rs 2,866 crore in the April-June quarter, its first in 14 years, dragged by a one-time expense relating to 3G gear and a sharp increase in finance costs, even though India mobile services continued to show signs of a recovery with average revenue per user (ARPU) moving up sequentially for the second straight three-month period.
Story first published: Friday, August 2, 2019, 7:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X