ஜியோவுடன் போட்டிப் போடமுடியாமல் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகியவை அதிகளவிலான வர்த்தகச் சரிவையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது. இதேபோன்ற நிலையைத் தான் நீண்ட காலமாக அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் சந்தித்து வருகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் தற்போது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ஜூலை மாத சம்பளம்
அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தனது 1.98 லட்ச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் சோகத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து உள்ளனர். ஒரு அரசு நிறுவனத்திற்கே இந்த நிலையென்றால் தனியார் நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஊழியர்கள் கதறல்
இதுகுறித்து அனைத்திந்திய BSNL அமைப்பான AUAB தலைவர் பி. அபிமன்யு கூறுகையில், "ஜூலை மாத சம்பளம் இன்னும் ஊழியர்களுக்கு அளிக்கப்படவில்லை, இதைக்குறித்தும் எவ்விதான முன் அறிவிப்பு செய்யப்படவில்லை" எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தச் சம்பவத்தால் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சோகத்தில் மூழ்கினர். சில மணிநேரத்திலேயே இந்தப் பிரச்சனை பெரியதாக வெடித்த நிலையில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் பதில்
பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த பிஎஸ்என்எல் நிர்வாகம், இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.கே புர்வார், ஊழியர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜூலை மாத சம்பள வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
சம்பளத்திற்கான நிதியை உள் நிர்வாகத்திலேயே சரிசெய்யப்பட்டு ஜூலை மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதைப்பற்றி AUAB அமைப்பிற்கு எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
850 கோடி ரூபாய்
ஜூலை மாத நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1.76 லட்ச ஊழியர்களும், MTNL எனப்படும் Mahanagar Telephone Nigam Limited நிறுவனத்தில் 22,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த ஊழியர்களின் ஒரு மாத சம்பள தொகை மட்டும் 850 கோடி ரூபாய். இதேபோல் பிப்ரவரி மாதம் கூட நிதி பிரச்சனையால் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையில் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் இதேபோன்ற நிலை உருவாகியுள்ளது அரசு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிறுவனங்கள்
எல்லா நாடுகளிலும் அரசு நிறுவனங்கள் தான் வலிமையான நிதி நிலையையும், வருமானத்தையும், அதிகளவிலான வர்த்தகத்தையும் பெறும். ஆனால் இந்தியாவில் மட்டும் தலைகீழாக இருக்கும்.
நம்ம நாட்டு அரசு நிறுவனங்கள் என்றாலே மட்டமான சேவை, அதிகக் கட்டணம், வர்த்தகமே இல்லாத நிறுவனத்திற்கு லட்சக் கணக்கில் ஊழியர்கள். இதில் கெயில், ஓஎன்ஜிசி, எல்ஐசி போன்ற நிறுவனங்கள் விதிவிலக்கு.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications