கொல்கத்தா, இந்தியா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விப்ரோ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய தகவல் தொழில் நுட்பத் துறையின் பெரிய நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், இங்குள்ள நியூ டவுனில் உள்ள சிலிக்கான் வேலி ஐடி மையத்தில் விப்ரோவு நிறுவனத்துக்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும், இதே போல மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மேற்கு வங்கத்தில் தனது இ - காமர்ஸ் தளங்களை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு விப்ரோ மீண்டும் வங்காளத்திற்கு வருகிறது என்றும், அவர்களுக்கு சிலிக்கான் வேலி மையத்தில் 50 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்வார்கள் என்றும், இது 10,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் நஸ்ருல் மஞ்சாவில் நடந்த Save Green Stay Clean என்ற நிகழ்வில் கலந்து கொண்ட மேர்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தனது உரையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வங்காளத்தில் ஈ- காமர்ஸ் தளங்களைத் தொடங்கி சங்கம் மற்றும் ஈ-வெப் என்ற இரண்டு திட்டங்களைத் தொடங்கும். இதன் மூலம் இந்த நிறுவனம் வங்காளத்தில் கைத்தறி நெசவாளர்களுகளின் நலனுக்காக முதலீடு செய்யும். ஆக இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ஆறு லட்சம் நெசவாளர்கள் பயனடைவார்கள் என்றும், அவர்களின் இந்த முயற்சியால் அவர்களின் வருமானம் 25 சதவிகித, அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது கட்சி தலைவர்களும் மற்றும் பலருடன் இணைந்து, நகரத்தில் சுற்று புறச் சூழலை காப்பாற்றும் பொருட்டு பேரணியை மேற்கொண்ட மம்தா Birla Planetarium to Nazrul Mancha பேரணியாக சென்றனராம்.
இந்த நிலையில் மரம் வளர்ப்பதை ஊக்கு விக்க தனது கட்சித் தலைவர்களை வலியுறுத்திய மம்தா, பூஜா கிளப்புகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் மரக்கன்றுகளை வழங்குமாறும் கூறியுள்ளார். அதோடு கடந்த 2011-ல் மேற்கு வங்காளத்தில் 14 சதவிகிதமாக இருந்த வனப் பகுதி, 2019ல் 19 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். வனப் பகுதிகளை அதிகரிக்கும் மம்தா மேடத்துக்கு வாழ்த்துக்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications