டெல்லி : கடந்த 2018ம் ஆண்டு உலக பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஆமாங்க.. இது கடந்த 2017 ம் ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) அடிப்படையில் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2018ம் ஆண்டில் பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, 20,494,100 மில்லியன் டாலர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதையடுத்து 13,608,152 மில்லியன் டாலர்களுடன் சீனா 2வது இடத்திலும், இதே 3 வது இடத்தில் 4,970,916 மில்லியன் டாலர்களுடன் ஜப்பானும், 4வது இடத்தில் ஜெர்மனியும், இங்கிலாந்து 5வது இடத்திலும், பிரான்ஸ் 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7வது இடத்தில் 2,726,323 மில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் உள்ளது.
எனினும் கடந்த 2017 ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உற்பத்தி 2.65 டிரில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. ஆனால் இது 2018ல் 2.73 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் சரிவை சந்தித்ததால், ஜிடிபி வளர்ச்சியும் சரிந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆமாங்க.. கடந்த 2017ல் இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. ஆனால் இதுவே கடந்த 2018ல் ரூபாயின் மதிப்பு 5 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கிரிசில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 2019 - 2020ம் நிதியாண்டில் 6.9 சதவிகிதமாக குறைத்துள்ளது. கடன் மதிப்பீட்டு நிறுவனமான இது, பலவீனமான பருவமழையை கணக்கில் எடுத்துக் கொண்டது என்றும், இதனால் நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைத்தது என்றும் கூறியுள்ளது. சர்வதேச அளவிலேயே மெதுவான வளர்ச்சி தான் காணப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
மோடி தலைமையிலான இந்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை 2024-25 ம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக 2018-19 ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியது. இந்தியா இந்த இலக்கை அடைய வேண்டுமெனில் இந்திய பொருளாதாரம் 8 சதவிகித இலக்கை அடைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications