SBI ரூ.2,950 கோடி லாபம்! ஆனாலும் பங்கு விலை 2.5% சரிவு..!

டெல்லி, இந்தியா: SBI இன்று (ஆகஸ்ட் 02, 2019 வெள்ளிகிழமை) தன் ஜூன் 2019 காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஜூன் 2019 காலாண்டில் SBI வங்கியின் நிகர லாபம் 2,950 கோடி ரூபாயாக உயர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் 2018 காலாண்டில் இதே SBI வங்கியின் காலாண்டு முடிவுகள் அறிக்கை 4,230 கோடி ரூபாய் நிகர நட்டக் கணக்கு வாசித்தது.

கடந்த ஜூன் 2018-ல் நட்டம் கண்ட வங்கி, இந்த காலாண்டில் லாபம் கண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான் என்றாலும், ப்ளூம்பெர்க் கணிப்பின் படி SBI வங்கி லாபம் ஈட்டவில்லை என்கிற செய்தியும் சந்தையில் நிலவி வருகிறதாம்.

SBI ரூ.2,950 கோடி லாபம்! ஆனாலும் பங்கு விலை 2.5% சரிவு..!

நிகர வட்டி வருமானம் கடந்த ஜூன் 2018 (23,928 கோடி ரூபாய்) காலாண்டை விட ஜூன் 2019 (25,455 கோடி ரூபாய்) காலாண்டில் 6.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். இது தான் ஒரு வங்கியின் மிக முக்கியமான செயல்பாட்டு வருமானம். இதை ஆங்கிலத்தில் Core income or Operating Income என்று சொல்வார்கள். SBI வங்கிக்கு வட்டி அல்லாத வருமானம் கடந்த ஜூன் 2018 (13,793 கோடி ரூபாய்) காலாண்டை விட ஜூன் 2019 (17,891 கோடி ரூபாய்) காலாண்டில் 29.7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.

மிக முக்கியமாக தோராய வாராக் கடன் (Gross Non Performing Asset), கடந்த ஜூன் 2018 காலாண்டை விட ஜூன் 2019 காலாண்டில் 20.8 சதவிகிதம் குறைந்து வங்கி நிர்வாகத்தின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறதாம். ஆனாலும் 1.68 லட்சம் கோடி ரூபாய் நம் SBI வங்கியில் தோராய வாராக் கடனாக நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோராய வாராக் கடனை, கொடுத்திருக்கும் மொத்த கடன் தொகையில் கணக்கிட்டுப் பார்த்தால், 7.53 சதவிகிதம் தோராய வாராக் கடனாக நிற்கிறதாம். கடந்த மார்ச் 2019 காலாண்டில் SBI-ன் தோராய வாராக் கடன் 7.53% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஜூன் 2018 காலாண்டில் இந்த தோராய வாராக் கடன் 10.69 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகர வாராக் கடனை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொடுத்திருக்கும் மொத்த கடனில் 3.07 % நிகர வாராக் கடனாக இருக்கிறதாம். கடந்த மார்ச் 2019-ல் இந்த நிகர வாராக் கடன் 3.01 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் கடந்த ஜூன் 2018 காலாண்டில் 5.29 % நிகர வாராக் கடனாக இருந்ததாம்.

நம் SBI வங்கியை நம்பி போட்டிருக்கும் டெபாசிட் தொகை 7.31 சதவிகிதம் அதிகரித்து 29.49 லட்சம் கோடி ருபாயாக அதிகரித்திருக்கிறதாம். அதே போல SBI வங்கி, கடன் கொடுத்திருக்கும் தொகை 14 சதவிகிதம் அதிகரித்து 21.35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறதாம்.

SBI வங்கியின் காலாண்டு முடிவுகள் ஓரளவுக்கு நல்ல முடிவுகளைச் சொல்லி இருந்தாலும் ,மதியம் 3.00 மணி அளவில், பங்கு விலை என்எஸ்இ-யில் சுமார் 2.5 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+