மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடி..4000 பேருக்கு வேலையை உருவாக்கும் திட்டம்..எடியூரப்பா ஒப்புதல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா நான்காவது முறையாக பதவி ஏற்ற பின்பு சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் ஒரு திட்டத்திற்கு கர்நாடாகா முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்துள்ளாராம்.

ஆமாங்கா.. கடந்த வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடி..4000 பேருக்கு வேலையை உருவாக்கும் திட்டம்..எடியூரப்பா ஒப்புதல்!

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த குட்ரிச் ஏரோஸ்பேஷ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Goodrich Aerospace Service Pvt Ltd) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளரார் என்று அந்த மாநில தொழில்துறை தெரிவித்துள்ளது.

480 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த நிறுவனத்தின் மூலம், சுமார் 4000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், விண்வெளி துறையில் இந்த மாநிலத்தின் நிலையை இது உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் விமானம் aircraft evacuation systems, லைட்டிங் அமைப்புகள், சரக்கு அமைப்புகள், இருக்கை அமைப்புகள், மற்றும் எலக்ட்ரிகல் பவர் சிஸ்டம்ஸ் என பலவற்றை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விமானத்துறை சேர்ந்த இந்த நிறுவனம் பெங்களுருவைச் சேர்ந்த தேவனஹள்ளி கிராமப் பகுதியில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், இது கர்நாடகா மாநிலத்தை உலக அளவில் விண்வெளித் துறையில் நிலை நிறுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த விரிவாக்கம் 4000 பேருக்கு கூடுதலாக வேலைக்கு அமர்த்தும் என்றும், விண்வெளி சமூகத்திற்கும் பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த குட்ரிச் ஏரோஸ்பேஷ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Goodrich Aerospace Service Pvt Ltd) என்ற இந்த் நிறுவனம், கடந்த 1996ம் ஆண்டிலிருந்து aircraft evacuation systems, லைட்டிங் அமைப்புகள், சரக்கு அமைப்புகள், இருக்கை அமைப்புகள், மற்றும் எலக்ட்ரிகல் பவர் சிஸ்டம்ஸ் என பலவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் தற்போது 3 இடங்களில் இதன் கிளைகளை கொண்ட இந்த நிறுவனம், பெங்களுருவில் 3000 மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் விரிவாக்கம் இன்னும் பல வேலைவாய்ப்புகளை கர்நாடகா மாநிலத்தில் உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: karnataka jobs
English summary

B S Yediyurappa has given approval to Goodrich Arospace unit : its generate 4,000 jobs

B S Yediyurappa has given approval to Goodrich Arospace unit : its generate 4,000 jobs
Story first published: Sunday, August 4, 2019, 11:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X