டெல்லி : இவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா? எதுக்கு என்று கேட்கிறீர்களா? கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் தொடர்பான விவரங்களை அளிக்க சில பொதுத்துறை வங்கிகள் தாமதப்படுத்தியதால் இந்த அபாராத தொகையினை விதித்துள்ளதாம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட்டில் மோசடி செய்யப்பட்டுள்ள கணக்குகளை, வங்கிகள் கொடுக்க தாமதப்படுத்தியதையடுத்து, ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அதிரடியான, முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்காததால் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு கூற தாமதப்படுத்தியாக, இந்த வங்கிக்கு 50 லட்சம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆமாங்க.. கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான மோசடி குறித்த அறிக்கையை 2018ம் ஆண்டு ஜூலை10ம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்தது. இந்த அறிக்கையானது மிக காலதாமதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வங்கி ஒழுங்கு முறை சட்டம் 1949ன் கீழ் தாமதமாக தெரிவித்தற்காக இந்த அபராதம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதே போல் பாங்க் ஆப் பரோடாவுக்கும் மோசடிகளை கால தாமதாமாக தெரிவித்ததற்காக 50 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அபாராத தொகைகள், 14 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அலகாபாத் பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கிகளுக்கு தலா 2 கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளுக்கு 1.5 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் படி இந்திய ரிசர்வ் வங்கி 7 பொதுத்துறை வங்கிகளிடம், 11 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications