2 லட்சம் பேரின் வேலையை காவு வாங்கிய ஆட்டோ மொபைல் துறை.. குழப்பத்தில் ஊழியர்கள்!

டெல்லி : சுமார் கடந்த ஆண்டின் பாதியிலிருந்தே ஆட்டோமொபைல் துறை ஆட்டம் காணத் தொடங்கியுள்ள நிலையில். தொடர்ந்து விற்பனை சரிவு, தேவை குறைந்து வருவதால் உற்பத்தியும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்திருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது.

ஆமாங்க.. ஒவ்வொரு அட்டோமொபைல் நிறுவனமும் கண்டு வரும் தொடர் நஷ்டத்தினை குறைக்க, தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன.

டீலர்ஷிப் மட்டத்தில் 2 லட்சம் வேலை குறைப்பு

டீலர்ஷிப் மட்டத்தில் 2 லட்சம் வேலை குறைப்பு

இந்த நிலையில் இத்துறையின் அடிமட்டத் ஊழியர்களிலிருந்து, உற்பத்தி வரை பல ஆயிரம் பேர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்தியாவில் உள்ள டீலர்ஷிப் மட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளனவாம். ஏனெனில் வாகன சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை வெகுவாக சரிந்ததையடுத்து, இழப்பின் தாக்கத்தைத் தடுக்க மனித வளத்தை குறைப்பதற்கான கடைசி முயற்சியை மேற்கொள்கின்றனர் என்றும் இந்த தொழிற்துறை அமைப்பின் Federation of Automobile Dealers Associations (FADA) தெரிவித்துள்ளது.

பணி நீக்க, இன்னும் அதிகரிக்கலாம்

பணி நீக்க, இன்னும் அதிகரிக்கலாம்

அதிலும் இந்த துறையின் உடனடி மீட்புக்கான அறிகுறிகள் எதுமில்லாமல் இருப்பதால், இன்னும் நிறைய ஷோரூம்கள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில், இத்துறையில் வேலையிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க அரசு இத்துறைக்கு உடனடியாக நிவாராணம் வழங்க ஜி.எஸ்.டியைக் குறைப்பது போன்ற உடனடி தலையீட்டைக் FADA கோரியுள்ளது.

தொழில் நுட்ப வேலையும் குறைக்கப்படலாம்

தொழில் நுட்ப வேலையும் குறைக்கப்படலாம்

கடந்த மூன்று மாதங்களில் பெரும்பான்மையான வேலை இழப்புகள் நிகழ்ந்துள்ளன. இது கடந்த மே மாதத்தில் தொடங்கி ஜூன் மற்றும் ஜூலை வரையிலான காலம் தொடர்ந்து அதிகளவில் வேலையிழப்பு நிகழ்ந்துள்ளன என்று FADA தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே கூறியுள்ளார். மேலும் மெதுவான வளர்ச்சி கண்டு வரும் இத்துறையில், தற்போது விற்பனை பிரிவில் தான் வேலைகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதே மந்த நிலை தொடரும் பட்சத்தில் தொழில் நுட்ப வேலைகள் கூட பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மோசமான வளர்ச்சியினால் வேலையிழப்புகள் தொடரும்

மோசமான வளர்ச்சியினால் வேலையிழப்புகள் தொடரும்

ஏனெனில் குறைவான விற்பனை தொடரும் பட்சத்தில், அதற்கான தொழில் நுட்ப வேலையும் குறையும், இந்த நிலையில் இதுவரை எவ்வளவு வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்ற கேட்கையில், இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன என்றும் ஆஷிஷ் ஹர்ஷராஜ் கூறியுள்ளார். ஏற்கனவே மிக மோசமான வளர்ச்சி கண்டு வரும் இத்துறையில், பெரும்பாலான் டீலர்ஷிப்களில் 7 - 8 சத விகிதம் வேலை விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மோசமாகி வரும் இந்த வளர்ச்சியினால், இன்னும் வேலையிழப்பு அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுகமாகவும் பலர் பாதிக்கின்றனர்.

மறைமுகமாகவும் பலர் பாதிக்கின்றனர்.

இதில் சுமார் 26,000 ஷோரூம்களில் 2.5 மில்லியன் மக்கள் நேரிடையாக இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஷோரூம்கள் சுமார் 15,000 டீலர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நேரிடையாக பல லட்சம் பேர் வேலை செய்வதோடு, மறைமுகமாக இத்துறையில் 2.5 மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர்.

பல ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன

பல ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன

கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த 18 மாதங்களில் மட்டும், 271 நகரங்களில், 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஷோரும்களில் பணியாற்றிய 32,000 மக்கள் வேலையிழந்துள்ளனர் என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.

விரைவில் மீண்டும் ஒர் அறிக்கை

விரைவில் மீண்டும் ஒர் அறிக்கை

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் அதிகப்படியன டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருப்பதாகக் கூறிய காலே, நாங்கள் மீண்டும் ஒரு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வருகிறோம். ஒரு சில சந்தர்ப்பங்களில் சில விநியோகஸ்தர்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு சென்றுள்ளனர் என்றும்,மேலும் இவ்வாறு அதிகப்படியான வேலைகளை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்காக காரணங்களை விரிவாகக் கூறிய காலே, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிதமான வளர்ச்சி, கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இரு மடங்காகக் குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மாறுபட்ட வகையில் பல செலவுகளை குறைத்தோம்

மாறுபட்ட வகையில் பல செலவுகளை குறைத்தோம்

எனினும் நல்ல தேர்தல் முடிவுகள் மற்றும் பட்ஜெட் இருந்த போதிலும் முதல் காலாண்டில் வெளிவந்த அறிக்கைகளின் விதம், தொடர்ந்து நிகழ்ந்து வரும் மந்த நிலையே நம்மை தாக்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் தான் விநியோகஸ்தர்கள், மனிதவளத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை நாடுகின்றன. மேலும் இது குறித்து விநியோகஸ்தர்கள் கூறுகையில், மனித வளம் விநியோகஸ்தர்களின் மிக அருமையான என்று கூறிய காலே, இதுதான் நாங்கள் குறைக்க முயற்சிக்கும் கடைசி முயற்சியாகும். மந்த நிலை தொடங்கிய போது நாங்கள் முதலில் பங்கு குறைப்புக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக பெரும்பாலான OEM க்கள் ஆதரவளித்துள்ளன. எனினும் எங்களால் முடிந்த அளவு பிற மாறுபட்ட செலவுகளை குறைக்கும் போது, நாங்கள் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மனிதவளத்தை தொடவில்லை என்றும் கூறியுள்ளார்.

நல்ல மனித சக்தியை பெறுவது கடினம்

நல்ல மனித சக்தியை பெறுவது கடினம்

அதோடு இது போன்ற மனித சக்தியை பெறுவது கடினம். ஏனெனில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நாங்கள் நிறைய முதலீடு செய்கிறோம். ஏனெனில் இது ஒரு விசித்திரமான தொழில்நுட்பம் மற்றும் ஃபீல்டு குறித்தான வேலை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) புள்ளிவிவரப்படி,. மொத்த வாகன விற்பனை, அனைத்து வகைகளிலும், 12.35 சதவிகிதமாக குறைந்து, 60,85,406 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 69,42,742 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்த வாகன விற்பனையும் வீழ்ச்சி

ஒட்டு மொத்த வாகன விற்பனையும் வீழ்ச்சி

FADAவால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிக்கையில், கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை 6 சதவிகிதம் குறைந்து 51,16,178 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 54,42,317 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஏறக்குறைய ஒரு வருடமாகவே விற்பனை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பயணிகள் வாகன பிரிவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மாருதி சுசூகியின் சந்தைத் அதிகாரி கூறுகையில், உள் நாட்டு சந்தையில் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் 36.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதே ஹீண்டாய் 10 சதவிகிதமும், மகேந்திரா அன்ட் மகேந்திரா 16 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 31 சதவிகிதமும், குறிப்பாக ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 48.67 சதவிகிதமும் சரிந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறையின் தலையெழுத்தை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய காலே, எங்களின் இந்த கடுமையான நிலையை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக, அரசின் சில ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் ஜிஎஸ்டி குறைப்பு பற்றி ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். மேலும் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் 49 சதவிகிதம் பங்கு கொண்டுள்ள எங்களுக்கு, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+