டெல்லி : பிரதமர் மோடி 2.0 அரசில், பொருளாதார இலக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலரை அடைய வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான எர்னஸ்ட் & யங் (EY) நிறுவனம், பிரதமர் மோடியின் இந்த இலக்கை அடைய ஆண்டுக்கு 9 சதவிகித வளர்ச்சியை காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் மொத்த உள்நாட்டு வளர்ச்சியை 38 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றும் EY, கூறியுள்ளது.
இந்த நிலையில் EY தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் 2.7 டிரில்லியன் டாலரிலிருந்து, 3 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் 9% வளர்ர்சி வேண்டும்
அதோடு மார்ச் 2020வுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் 9 சதவிகிதம் வளர்ச்சி காண வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிலும், 2021ம் நிதியாண்டில் 3.3 டிரில்லியன் டாலராக வளர்ச்சி காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இலக்கை அடைய ஆண்டுக்கு ஆண்டு 9% வளர்ச்சி
2022ம் நிதியாண்டில் 3.6 டிரில்லியன் டாலாராக வளர்ச்சி காண வேண்டும் என்றும், 2023ம் நிதியாண்டில் 4.1 டிரில்லியன் டாலாராக வளர்ச்சி காண வேண்டும் என்றும், 2024ம் நிதியாண்டில் 4.5 டிரில்லியன் டாலாராக வளர்ச்சி காண வேண்டும் என்றும், 2025ம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலாராக வளர்ச்சி காண வேண்டும் என்றும் EY அறிக்கையில் கூறியுள்ளது. ஆக மொத்தம் பிரதமர் மோடியின் இலக்கை அடைய ஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகித வளர்ச்சியினை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்றும் கூறப்படுகிறது.
பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருக்க வேண்டும்
மேலும் பணவீக்க விகிதத்தை 4 சதவிகிதமாக கருதினால், 2025ஆம் ஆண்டு பொருளாதார இலக்கை அடைய கட்டாயம் 9 சதவிகித வளர்ச்சி வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்தால், இந்த இலக்கை அடைய முடியாது. மேலும் 9 வளர்ச்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகள் குறையும் பட்சத்தில் மோடியின் இலக்கை அடைய இன்னும் சில காலங்கள் ஆகலாம் என்றும் கூறியுள்ளது இந்த மதிப்பீட்டு நிறுவனம். அதோடு 2019ம் நிதியாண்டில் முதலீட்டு விகிதம் 31.3 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி கண்டால் மட்டுமே இலக்கை அடைய முடியும்
மேலும் ஏற்கனவே இந்திய பொருளாதாரம் 5ம் இடத்திலிருந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிலையில், பொருளாதார நிலை மேலும் வளர்ச்சி கண்டால் மட்டுமே அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க முடியும், பொருளாதார இலக்கையும் அடைய முடியும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications