டெல்லி : இந்தியாவின் ஐ.ஐ.டி உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருந்து, வெளிவரும் பட்டதாரிகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் டிடர்ஜென்ட்கள் விற்பதை விட, இந்தியாவின் சிறந்த நோக்கங்களுக்காக பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஆமாங்கா.. ஐ.ஐ.டி போன்ற உயர் மட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து வெளி வரும் சிறந்த பட்டதாரிகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் டிடர்ஜெண்டுகள் விற்பனையை அதிகரிப்பதை விட, இந்தியாவில் அதைவிட சிறந்த நோக்கம் கொண்டவைக்களுக்காக தேவைப்படுகின்றனர்.
இந்த டிடர்ஜெண்டு விற்பனையை யார் வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் அதற்கு ஐ.ஐ.டி பட்டதாரி போன்ற பட்டதாரிகளின் அறிவு மற்றும் தகுதி தேவையில்லை என்றும் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியா கல்வியில் சிறந்து விளங்கியது!
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்திய மேலாண்மை மாநாட்டின் 10 வது பதிப்பில் (10th edition of the Indian Management Conclave) பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டில் அடிப்படை ஆராய்சிகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக தனது வாழ்க்கையை அர்பணித்த, எந்தவொரு மாணவனை தெரியுமா என்றும் கேட்டுள்ளார். மேலும் கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான 1800 ஆண்டுகளுக்கும் மேலாக தக்ஷிலா மற்றும் நாலந்தா, விக்ரம்ஷிலா போன்ற பல்கலைக் கழகங்களுடன் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகியது என்றும் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியா கல்வியில் முன்னணியில் இருந்தது!
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. மாறாக 1800 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்ததைப் போலவே போக்குவரத்து தலைகீழாக மாற வேண்டும். நாலந்தா மற்றும் விக்ரம்ஷிலா அழிக்கப்படும் முன் வரை இந்தியா உயர் கல்வியில் முன்னணியில் இருந்தது. இந்த வகையில் ஐ.ஐ.டி பட்டதாரிகள் நான் பெருமைபடுகிறேன் என்றும் முகர்ஜி கூறியுள்ளார்.
5 ஆண்டு திட்டங்களில் மிகப்பெரிய கல்வி கட்டமைப்புகள்!
மேலும் இந்தியாவுக்கு என்று ஒரு பிராண்ட் பெயர் உள்ளது. முதல் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து 12 வது ஐந்தாண்டு திட்டம் வரை உயர்கல்வியில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை கட்டினோம். 1,000 மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 36,000 கல்லூரிகள், அதே போல ஐஐடிகளின் எண்ணிக்கை 8, பின் 16, பின் 30 என அதிகரித்தன என்றும் கூறியுள்ளார்.
ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் யாரும் இல்லை
மேலும் துரதிஷ்டவசமாக 1933 முதல் 70 ஆண்டுகளில், எந்தவொரு இந்திய பல்கலைக்கழகத்திலும், அடிப்படை ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட நோபல் பரிசு பெற்றவர் இல்லை. இதற்கான திறமை இல்லை என்று கூறவில்லை. சுற்றுப்புலம் அல்லது அடிப்படை ஆராய்ச்சிக்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படும் சூழல் இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு இதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் தலைமை நீதிபதி சுதிர் ரஞ்சன் தாஸ் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மற்றவர்களின் சம்பளம் கிட்டதட்ட பாதி தான்
மேலும் பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலும் தங்களது சுயவிவரத்தை உயர்த்துவதற்காக அவர்கள் வணிகப் பள்ளிகளுக்கு செல்கிறார்கள், ஏனெனில் மேலாண்மை பட்டதாரிகள் கணிசமாக அதிகம் சம்பளம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு ஐ.ஐ.டி பட்டதாரியின் சாராசரி சம்பளம் ரூ.8 லட்சமாகும் என்றும், இது ஒரு உயர் நிர்வாக பள்ளியில் பட்டம் பெற்றவருக்கும் கிட்டதட்ட இரட்டிப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு பல சலுகைகள்!
இந்த நிலையில் பல தசாப்தங்களாக வணிகப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வுகள் பொறியாளர்களை நோக்கித் திசை திருப்பப்படுகின்றன. இதில் தகுதியற்றவர்கள், பொறியியலாளர் அல்லாதவர்கள் இதில் வெல்வது கடினமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது சிறந்த வணிகத் தலைவர்களை உருவாக்க ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த வகுப்பறை உதவும் என்பதை மேலாண்மை பள்ளிகள் உணர்ந்ததால், தற்போது மாறத் தொடங்கியுள்ளன. பெண்கள் மற்றும் மற்றும் பொறியியலாளர் அல்லாதவர்கள் இப்போது ஐ.ஐ.எம் மற்றும் டாப் பிசினஸ் பள்ளிகளில் (B-Schools) தேர்வு செய்ய சில சலுகைகளை பெறுகிறார்கள். இந்த ஆண்டு முத;ல் ஐ.ஐ.எம்களில் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதில் பெண்கள் எண்ணிக்கையை 24% முதல் 42% வரை உள்ளநர் என்றும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications