அம்பானி அதிரடி முதலீடு.. ஆன்லைன் ஷாப்பிங் துறையில் புது டார்கெட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமில்லை, இந்தியப் பொருளாதாரமே இவரை நம்பி தான் உள்ளது என்றால் மிகையில்லை. இவர் பெயரில் 2.88 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் வருவாய் ஈட்டும் வர்த்தகத்தைச் செய்து நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஒரு வர்த்தகத் தலைவராக இருக்கிறார் முகேஷ் அம்பானி.

 

இப்படிப்பட்ட ஒருவர் எந்தொரு வர்த்தக முடிவை எடுத்தாலும் அதில் மிகப்பெரிய உள் அர்த்தம் அடங்கியிருக்கும். அப்படித் தான் தற்போது முகேஷ் அம்பானி செய்துள்ள செயலும்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கடந்த சில வருடங்களாகவே கச்சா எண்ணெய், பாலிமர், எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறையைவிட்டு புதிய வர்த்தகத்தை நோக்கி தனது பயணத்தைத் துவங்கியுள்ளார். இந்தப் பயணத்தில் மூலம் B2B துறையில் B2C துறைக்கு வந்துள்ளார்.

Business to consumer வர்த்தகத்தைப் பெறு கடினம் தான், ஆனால் லாபம் மிகவும் அதிகம். இதைக் கணக்கில் கொண்டு தான் எண்ணெய் வர்த்தகத்தை ஓரம்கட்டிவிட்டுத் தற்போது ரீடைல் துறையில் இறங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.

நிறுவன கைப்பற்றல்

நிறுவன கைப்பற்றல்

பொதுவாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு துறையில் இறங்கிவிட்டால் ஒரு கலக்குக் கலக்காமல் விடாது. இப்படித் தான் டெலிகாம் துறையும். தற்போது ஆன்லைன் ஷாப்பிங் துறையைக் குறிவைத்துள்ளது.

ஏற்கனவே Ajio மூலம் பல லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ரிலையன்ஸ் தற்போது முன்னணி பேஷன் ஈகாமர்ஸ் நிறுவனமான FYND நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

FYND நிறுவன
 

FYND நிறுவன

கூகிள் நிறுவனம் முதலீடு செய்துள்ள FYND நிறுவனத்தில் சுமார் 295 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 87.6% பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகக் குழுவில் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மும்பை-யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டும் சுமார் 100 கோடி முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இந்திய ஈகாமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இத்துறையில் வலிமையுடன் போட்டிப்போட வேண்டும் எனத் தனது வர்த்தக அடித்தளத்தில் வலிமைப்படுத்திக் கொண்டு வருகிறார் முகேஷ் அம்பானி.

இதன் மூலம் இனிவரும் காலத்தில் அம்பானியின் டார்கெட் ஆன்லைன் ஷாப்பிங் மட்டும் தான் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance to acquire 87.6% stake in Fynd for Rs 295 Cr

RIL through its wholly-owned subsidiary Reliance Industrial Investments and Holdings Ltd, will acquire an 87.6% stake in Fynd for Rs 295 crore. Besides, RIL also has reserved an option to further invest up to Rs 100 crore in the Mumbai-based startup by December 2021.
Story first published: Monday, August 5, 2019, 12:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X