மும்பை : அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் வர்த்தக போரால், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு என்னவோ அது நல்ல விஷயமாகவே அமைகிறது.
ஆமாங்க.. அமெரிக்கா - சீனா பிரச்சனை மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது, இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனாவின் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ளார்.

இந்த வரி அதிகரிப்பு வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி பொருட்கள் விலையும் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனா அரசு இது குறித்து எந்த விதமான திருப்திகரமான காரணங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் இப்போதைக்கு அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தத்துக்கு சாதகமான சூழலும் இல்லை. இதனால் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை மேலும் வலுவாகி கொண்டே போகிறது. எனினும் இந்த இரு நாடுகளின் நட்பு நாடான இந்தியாவுக்கு இது சாதகமான வாய்ப்பாக அமைய பல வாய்ப்புகள் உள்ளதாக பல கருத்துகள் நிலவி வருகின்றன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள், கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட செயற்கை ரத்தின கற்கள், விலை மதிப்பற்ற அல்லது மதிப்பற்ற கற்கள் பதித்த நகைகளுக்கும் இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நியூயார்க்கில் வைர ஆய்வாளரும் ஆலோசகருமான பால் சிம்னிஸ்கி, அமெரிக்கா சீனாவிலிருந்து ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மெருகூட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் 15 சதவிகித வரிகள் தொடர்ந்தால், இது அமெரிக்கா சில்லறை விற்பனையாளர்களை வெகுவாக பாதிக்கும். ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
இதனால் அமெரிக்கா சில்லறை விற்பனையாளர்கள், இந்தியாவில் இருந்து வடிவமைக்கப்பட்ட நகைகளை வாங்குவதற்கு இது வழிவகுக்கும். அமெரிக்காவின் இந்த வரி உயர்வு உண்மையில் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவின் தங்க நகை ஏற்றுமதி என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயமாக இருக்கும்.
மேலும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை நிரப்ப இந்திய ஏற்றுமதியாளர்கள் ஒரு வாய்ப்பு பெறுவார்கள் என்றும் சிம்னிஸ்கி கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications