ஜியோவிற்கு எதிராகப் போராடும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தொடர்ந்து தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறார். இதற்காக அனைத்து விதமான பணிகளையும் சுனில் மிட்டல் செய்து வருகிறார்.
ஜியோ உடன் போட்டி
ஜியோ ஜிகா பைபர் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவை மட்டும் அல்லாமல் டிடிஹெச் சேவையும் அளிக்க உள்ளது. இதனைச் சமாளிக்க ஏர்டெல் கையில் இருக்கும் ஓரே ஆயுதம் டிடிஹெச் சேவையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவது தான்.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
இந்நிலையில் ஜியோ உடன் போட்டிப்போடும் முடிவுடன் ஏர்டெல் டிஜிட்டல் டிவி உடன் டிஷ் டிவி இணைய உள்ளது. இக்கூட்டணியில் தனியார் முதலீட்டு நிறுவனமான வார்பெர்க் பின்கஸ்-ம் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
3 நிறுவனங்களும் இணைய அனைத்து விதமான பேச்சுவார்த்தையும் முடித்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் 4-6 வாரத்தில் வெளியிடும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஜீ நிறுவன பங்குகள்
எஸ்ஸல் குரூப் நிர்வாகத்திற்குக் கீழ் இருக்கும் ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் டிஷ் டிவி. தற்போது எஸ்ஸல் குரூப் நிறுவனம் ஜீ நிறுவன பங்குகளை விற்பனை செய்வதில் பிசியாக இருக்கும் காரணத்தால் ஏர்டெல் டிஜிட்டல் டிவி - டிஷ் டிவி இணைப்பு குறித்து எவ்விதமான செய்திகளையும் வெளியிடவில்லை எனச் சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் சிலர் இரு நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் சில தகவல் கிடைத்துள்ளது.
முகேஷ் அம்பானி
ஜியோ நிறுவனத்தின் பிராட்பேன்ட் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென ஜியோ நிறுவனம் டென் நெட்வொர்க்ஸ் மற்றும் ஹேத்வே கேபிள் மற்றும் டேட்டாகாம் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை பெற்றுள்ளது. இதன் பின்பு தான் ஏர்டெல் தனது பக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று தான் ஏர்டெல் தற்போது டிஷ் டிவியுடன் இணைய உள்ளது.
4 கோடி வாடிக்கையாளர்கள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி இணைந்த பின்பு உலகின் மிகப்பெரிய டிவி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனமாக உருவாக உள்ளது. இக்கூட்டணி நிறுவனத்தின் மூலம் சுமார் 3.9 கோடி வாடிக்கையாளர்கள் பெற உள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications