இனி முக்கிய கடன்களின் வட்டி விகிதம் குறையும்.. குதூகலத்தில் மக்கள்!

மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து 5.4 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவும், நடப்பு 2019 - 2020ம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.9 சதவிகிதமாக இருக்கும் என்றும், இது முன்னர் 7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆமாங்க.. நடப்பு ஆண்டில் மட்டும் இது நான்காவது முறையாக குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதமாகும். இது மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் எடுத்துக் கொள்ளபட்ட முயற்சி என்றும் கூட கருதலாம்.

பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்

பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்

இது குறித்தி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த தேவையும் அதிகரிக்கும் பட்சத்தில், வளர்ச்சியும் அதிகரிக்கும், குறிப்பாக தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் போது, பணவீக்கத்திற்கு இணங்க அமையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் இந்தக் குழு நடப்பு 2019 - 2020ம் ஆண்டிற்கான மொத்த உற்பத்தி வளர்ச்சியும் 7 சதவிகிதத்திலிருந்து, 6.9 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 5.75 சதவிகிதத்திலிருந்து, 5.40 சதவிகிதமாக குறைத்துள்ளது.

இந்த வட்டி குறைப்பு MPC 4 பேர் ஆதரவு

இந்த வட்டி குறைப்பு MPC 4 பேர் ஆதரவு

இந்த நிலையில் Monetary Policy Committee of India (MPC) கமிட்டியில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவின் தலைவராக, ரிசர்வ் வங்கியின் ஆளுனரான சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆறு உறுப்பினர்களில் 4 பேர் இந்த வட்டிவிகித குறைப்புக்கு வாக்களித்தும், மீதமுள்ள இருவர் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கவும் வாக்களித்துள்ளனராம். அந்த நான்கு உறுப்பினர்களில் ரவீந்திரா. ஹெச், தோலகியா, மைக்கேல் தேபப்ரதா மற்றும் சக்தி காந்த தாஸ் நான்கு பேரும் 35 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. இதுவே சேதன் காட் மற்றும் பாமி துவா வாக்களித்தனர்.

இனி தவணை தொகை குறையும்

இனி தவணை தொகை குறையும்

ஏற்கனவே கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் உள்ளிட்ட மூன்று முறையோடு சேர்த்து இதுவரை 110 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் குறையும் போது, வங்கிகள், மக்களுக்குகான கடன் தொகைக்கான வட்டி விகிதத்தில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தனி நபர்களுக்கான வீட்டுக் கடன் மற்றும் பல நுகர்வோர் கடன்களுக்கு வட்டி விகிதம் குறையும் போது தவணை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி குறைப்பு நல்ல சமிக்கை

வட்டி குறைப்பு நல்ல சமிக்கை

பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் இது குறித்து கூறுகையில், அக்டோபரில் பிஸியான சீசன் துவங்குவதற்கு முன்பே, 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இது பொருளாதார வளர்ச்சிகான ஒரு சக்தி வாய்ந்த சமிக்கை என்றும் கூறியுள்ளது.

இனி வட்டி குறையலாம்

இனி வட்டி குறையலாம்

இனி முக்கிய கடன்களுக்கான வட்டி இனி குறையலாம். ஏனெனில் வங்கிகளுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தால் வங்கிகள் கடன் களுக்கான வட்டித் தொகையும் குறைக்கலாம். இதனால் முக்கிய கடன் களுக்கான வட்டித் தொகை குறையும். இதனால் மாத மாதம் கட்டும் தவணை தொகையும் குறையும் என்றும் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+