Cafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர் : தற்கொலை செய்து கொண்ட காஃபே காஃபி டே அதிபர் சித்தார்த்தா மிக மிக எளிமையானவர். அவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். அதிலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தாலும், கடன் பிரச்சனையால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஃபே காஃபி டே நிறுவனத்தின் பங்கின் விலை கிட்டதட்ட எட்டு செசன்களில், 60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் சுமார் 2,167.44 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆமாங்க.. காஃபே காஃபி டே நிறுவனத்திப் தலைவர் என்று கடந்த ஜூலை 29ம் தேதியன்று காணமல் போனதாக கூறப்படும் நாளிலிருந்து, சரிய ஆரம்பித்த பங்கின் விலை, இதுவரை இல்லாத அளவு 77.20 ரூபாயை இன்று தொட்டுள்ளது. அதிலும் 4.98 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, லோவர் சர்க்யூட் ஆகி உள்ளதால் இந்த விலையிறக்கம் தற்போது தடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அதிலும் இந்த வாரத்திலிருந்து 22.37 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பெரிய இழப்பு தான்

பெரிய இழப்பு தான்

கஃபே காஃபி டே எண்டர்பிரைசஸின் முதலீட்டாளரக்ள் கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் 2,437 கோடி ரூபாயை இழந்துள்ளனராம். இதுவே சித்தார்த்தா காணமல் போனதாக கூறப்படும் ஜூலை 29லிருந்து 4,067.65 கோடி ரூபாயாக இழந்துள்ளனராம். கஃபே காஃபி டே எண்டர்பிரைசஸின் விலை நேற்று முந்திய நாளின் முடிவு விலையான 81.25 லிருந்து தற்போது 77.20ல் உள்ளது. இன்று லோவர் சர்க்யூட் என்பதால் அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு வீழ்ச்சியா?

இவ்வளவு வீழ்ச்சியா?

இந்த நிலையில் இங்கு விற்பனையாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பங்கினை வாங்குபவர் யாரும் இல்லை என்றும், கடந்த 12 நாட்களில் மட்டும் கஃபே காஃபி டேயின் பங்கு விலை 61.38 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 72.12 சதவிகிதம் சரிந்துள்ள இந்த பங்கின் விலை, கடந்த ஆண்டில் மொத்தமும் 71.70 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கஃபே காஃபி டே எண்டர்பிரைசஸின் பங்கின் விலை டெக்னிக்கல் அனாலிஸிஸ்சின் படி 50 நாள், 200 நாள் கீழ் வர்த்தகமாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் தொல்லை
 

வருமான வரித்துறை அதிகாரிகளின் தொல்லை

இந்த நிலையில் சித்தார்த்தா மரணத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த தொல்லையும், நெருக்கடியும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வருமான வரித்துறையில் முக்கிய அதிகாரி நிலையில் உள்ள ஒரு அதிகாரி, மிகப்பெரிய தொந்தரவுகளை சித்தார்த்தாவுக்கு கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி சித்தார்த்தா பல தடவை புகார் அளித்துள்ளார். மேலும் தனது தற்கொலை கடிதத்திலும் அந்த அதிகாரி பற்றி சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இனி சித்தார்த்தின் மகன் கவனிக்கலாம்!

இனி சித்தார்த்தின் மகன் கவனிக்கலாம்!

சித்தார்த்தாவுக்கு அமர்த்யா, இஷான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் அமர்த்யா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர். இவர் கடந்த சில வாரங்களாக தான் தனது தந்தையின் அலுவலகங்களுக்கு வரத்தொடங்கி உள்ளார். எனவே சித்தார்த்தாவின் முக்கிய அலுவலக பொறுப்புகளை இவர் கவனிப்பார் என்று தெரிகிறது. அதுபோல மற்றொரு மகன் இஷானும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பயின்றவர். அவர் தனியாக தொழில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coffee Day investors lose Rs 2,167.44 crore in 8 trading days

Coffee Day investors lose Rs 2,167.44 crore in 8 trading days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X