போபால் : பொதுவாக வங்கி கணக்குகளைத் திறக்கும் போதே, ஒவ்வொரு மாதமும் மினிமம் பேலன்ஸ் தொகையை வங்கி கணக்கில் நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அதற்கு ஏற்றார் போல அபராதங்களை விதிக்கப்படும் என்றும் வங்கிகள் கூறுகின்றன. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மட்டும் 278.66 கோடி ரூபாய் அபாராதத்தை வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில், உள்ள சந்திரசேகர் என்ற ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், கடந்த இரண்டு நிதியாண்டில் மட்டும் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு குறித்த இருப்பு தொகை சரியாக வைத்திருக்காததால், எவ்வளவு அபராதம் பஞ்சாப் நேஷனல் பேங்க் வசூலித்துள்ளது என்றும் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த அபராத தொகையாக நாடு முழுவதும் 12.7 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கிடையே வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் இது குறித்து கூறுகையில், வசூல் செய்யப்பட்ட இந்த தொகையானது, நாடு முழுவதும் உள்ள 12.7 மில்லியன் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 - 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த அபராதம் 32 சதவிகிதம் அதிகரித்து, 278.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மட்டும் இந்த வங்கி 1,22,53,756 சேமிப்பு கணக்குகளின் மூலம், 226. 36 கோடி ரூபாயும், இதுவே 5,37,692 கோடி நடப்பு கணக்கிலிருந்து, 52.30 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகவும் இந்த வங்கி அறிவித்துள்ளது.
இந்த அபராதம், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்காததால் விதிக்கப்பட்டதாவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications