டெல்லி : டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், அதன் நிகரலாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 64.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, அதன் நிகரலாபம் 693 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 1,940.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே வருவாய் 1.27 சதவிகிதம் அதிகரித்து, 35,947.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறைந்த உள்நாட்டு வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிகண்டு வரும் ஐரோப்பாவின் வளர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உள்நாட்டு வருமானம் 2 சதவிகிதம் குறைந்து, 16,091 கோடி ரூபாயாக குறைந்துள்ளது எனவும், இதுவே டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஐரோப்பிய வருமானம் 11.77 சதவிகிதம் சரிந்து 14,495 கோடி ரூபாயாக வருவாய் குறைதுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார செயல்பாடு, பருவகால மந்த நிலை மற்றும் பணப்புழக்க சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்தியாவில் இரும்பு விலை குறைந்தது. அதோடு அதிகப்படியான இறக்குமதியால் இரும்பு விலை இன்னும் மோசமாகியுள்ளது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதே ஐரோப்பாவை பொருத்த வரை நிலையற்ற மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரெக்ஸிட் பிரச்சனை உள்ளிட்ட தலைவலிகளால், இரும்பு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் உயர்ந்த அதிகப்படியான இறக்குமதி மற்றும் உயர்ந்த மூலப் பொருட்களின் விலைகள் மேலும் சரிவுக்கு வழி வகுத்ததாகவும் கூறியுள்ளது.
எப்படியெனினும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி 11 சதவிகிதமும், இதே டெலிவரி 5 சதவிகிதமும், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போதும் அதிகரித்துள்ளது.
மேலும் வரி, வட்டி மற்றும் தேய்மானம் இவற்றிற்கு முந்தைய வருமானம், 15.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 5,376.9 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிறுவனம் இந்த காலாண்டில் 7.15 மில்லியன் டன்னாக உற்பத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் இந்தியாவில் உற்பத்தி 6.45 மில்லியன் டன்னாக இருக்கலாம் எண்றும் கூறப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு 3.64 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3.80 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 14 ரூபாய் குறைந்து 367.40 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications