கவலைபடாதீங்க.. தொழில்துறையை ஊக்குவிக்க விரைவில் புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

டெல்லி : துவண்டு போயுள்ள தொழில் துறையை மீண்டும் துளிர்க்க வைக்க விரைவில் அதிரடியான பல நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஆமாங்க.. மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும் துவண்டு போயுள்ள தொழில்துறையை காப்பாற்றவும், தொழிலதிபர்களுடனான கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று தொழிலதிபர்கள் மற்றும் நிதித்துறையை சார்ந்தவர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், அவர்களிடம் அரசு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, தொழில்துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், விரைவில் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

என்ன பேசப்பட்டது?

என்ன பேசப்பட்டது?

சரி இந்த கூட்டத்தில் அப்படி என்னதான் பேசப்பட்டது என்று கேட்கிறீர்களா? தொழில்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிதித் துறையை சேர்ந்த அதிகாரிகள், கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், மிக மோசமாக மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்றும், இந்த மந்த நிலையை போக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இனி வங்கிகளுக்கு பிரச்சனைகள் சற்று குறையும்?

இனி வங்கிகளுக்கு பிரச்சனைகள் சற்று குறையும்?

பொதுவாக மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்க, பணப்புழக்கத்தை அதிகரித்தாலே, வளர்ச்சி சற்று அதிகரிக்கலாம் என்றும் கூறப்படும். இந்த நிலையில் வங்கிகள் நிறுவனங்களுக்கு கடன் அளிக்க நிதி இல்லை என்ற பிரச்சனை தற்போது இல்லை. மாறாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் தான் இந்த நிதிப் பிரச்சனை நிலவி வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாராம்.

பொருளாதார வளர்ச்சியை சரிசெய்ய விரைவான நடவடிக்கை

பொருளாதார வளர்ச்சியை சரிசெய்ய விரைவான நடவடிக்கை

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் தற்போது பொருளாதாரம் மிக பின்னடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்ய, விரைவில் புதுப்பிக்க, 1 டிரில்லியன் ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இதோடு இந்தக் கூட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய வர்த்தக மற்றும் தொழிதுறை சங்கங்கள் மற்றும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனராம்.

நிதி பிரச்சனை!

நிதி பிரச்சனை!

மேலும் ஆட்டோமொபைல், Non Banking Financial Company துறை, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் போன்ற துறைகள் சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பிரச்சனைகளை களைய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் தொழிலுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

CSRரில் பங்கேற்தவருக்கு சிறை தண்டனை வேண்டாம்

CSRரில் பங்கேற்தவருக்கு சிறை தண்டனை வேண்டாம்

சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடாத (corporate social responsibility) நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனினும் நிறுவனங்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த நடவடிக்கை தற்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதுவே தொழில்துறையினரின் சார்பில் இந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு (CSR) செலவிடப்படாத நிறுவனங்கள் மீது சிறை தண்டனை விதிக்க விதிமுறைகள் உள்ளதாகவும், அந்த விதிமுறைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வட்டி குறைப்பு ஊக்கம் அளித்துள்ளது

வட்டி குறைப்பு ஊக்கம் அளித்துள்ளது

மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிக்க, தேவையான சூழ்நிலையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்றும், வட்டிக் குறைப்பின் பலமை முழுவதும் பயனாளர்களுக்கு போய் சேர, நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றும் கூறப்பட்டதாம். மேலும் இந்த வட்டி குறைப்பு எங்களை (தொழில்துறையை) ஊக்குவித்துள்ளது என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்துறையினர் கூறியுள்ளனராம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+