டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை நீண்ட காலாமாக இருந்து கொண்டிருக்கும் வகையில், தற்போது இந்தியா ஜம்மு காஷ்மீருக்கு, சட்டப்பிரிவு 370ன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.
இந்த நிலையில் மாநில அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இனி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதற்கு இந்த கூட்டம்?
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பாக இந்திய அரசின் அதிரடியான நடவடிக்கை குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேசிய பாதுகாப்பு குழுவின் (NSC) இரண்டாவது அமர்வில் இந்திய அரசாங்கத்தின் முடிவிற்குப் பதிலளிக்கும் விதமாக விவாதித்து முடிவெடுக்க, உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு தக்க பதிலடி?
மேலும் இக்கூட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பதிலடியாக, இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியிலிருந்து பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்கவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவ்வளவு ஏற்றுமதி?
இந்த நிலையில், சரி அப்படி எவ்வளவு தான், இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 0.1 சதவிகிதமே. எனினும் பாகிஸ்தானுக்காக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 2.01 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதே இந்தியாவுக்கு பாகிஸ்தானின் இறக்குமதி வெறும் 0.49 பில்லியன் டாலராகவே இருந்தது கவனிக்கதக்கது.
அப்படி என்னதான் இறக்குமதி செய்யப்படுகிறது?
கனிம எரிபொருள், பழங்கள், உப்பு மற்றும் சல்ஃபர், சுண்ணாம்பு தாதுக்கள், தோல், ores, slag உள்ளிட்ட பல பொருட்களை பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே இந்தியாவிலிருந்து காட்ட, ஆர்கானிக் கெமிகல்ஸ், பிளாஸ்டிக்குகள், பெயிண்ட்ஸ் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
எது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது?
இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், காட்டன் 550.33 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், ஆர்கானிக் கெமிகல்ஸ் 457.75 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், பிளாஸ்டிக்ஸ் 131.19 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், பெயின்ட்ஸ் 114..48 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கும், அதோடு மெஷினரி மற்றும் உதிரி பாகங்கள் 94.88 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே பாகிஸ்தானிடம் இருந்து கனிம எரிபொருள்கள் 131.3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், பழங்கள் மற்றும் உலர் கொட்டை வகைகள் 103.3 மில்லியன் டாலர் மதிப்பிலும், மற்றும் சல்ஃபர், சுண்ணாம்பு தாதுக்கள் 92.84 மில்லியன் டாலர் மதிப்பிலும், இதோடு தொல் பொருட்கள் 16.27 மில்லியன் டாலர்கள் மதிப்பிலும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மற்ற நாடுகளுடன் ஏற்றுமதி?
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு 52.41 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே சீனாவுக்கு 16.75 பில்லியன் டாலர் மதிப்பிலும், எனினும் சீனாவிலிருந்து 70.32 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதியும் செய்யப்படுகிறது.
மொத்த ஏற்றுமதி எவ்வளவு?
இந்தியாவிலிருந்து கடந்த 2014 - 2015ம் ஆண்டில் மொத்த ஏற்றுமதி 310.3 பில்லியன் டாலர் மதிப்பிலும், இதில் பாகிஸ்தானுக்கு 1.9 பில்லியன் டாலர் அளவுக்கும், (0.6%), இது 2015 - 2016ம் ஆண்டில் மொத்தம் 262.3 பில்லியன் டாலர் மதிப்பிலும், பாகிஸ்தானுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலும், (0.8%), இது 2016 - 2017ல் மொத்தம் 275.9 பில்லியன் டாலர் மதிப்பிலும், பாகிஸ்தானுக்கு 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலும் (0.7%), 2017 - 2018ல் மொத்தம் 303.6 பில்லியன் டாலர் மதிப்பிலும், பாகிஸ்தானுக்கு 1.9 பில்லியன் டாலர் (0.6%) அளவிலும், 2018 - 2019ல் மொத்தம் 330 பில்லியன் டாலர் மதிப்பிலும், பாகிஸ்தானுக்கு 2.06 பில்லியன் டாலர் அளவுக்கு(0.6) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து எவ்வளவு இறக்குமதி?
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதில், கடந்த 2014 - 2015ல் மொத்தம் 448 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானிலிருந்து 0.50 பில்லியன் டாலர் மதிப்பிலும், இது 2015 - 2016ல் மொத்தம் 381 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானிலிருந்து 0.44 பில்லியன் டாலர் மதிப்பிலும், இதுவே கடந்த 2016 - 2017ல் மொத்தம் 384.4 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானிலிருந்து 0.45 பில்லியன் டாலர் மதிப்பிலும், கடந்த 2017 - 2018ல் மொத்தம் 465.6 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானிலிருந்து 0.49 பில்லியன் டாலர் மதிப்பிலும், கடந்த 2018 - 2019ல் மொத்தம் 514 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானிலிருந்து 0.49 பில்லியன் டாலர் மதிப்பிலும் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications